Today Rasi Palan: இன்றைய ராசி பலன் (17.12.2022)

சென்னை: இன்றைய நாள் (Today Rasi Palan) சனிக்கிழமை, மார்கழி மாதம் 2ம் தேதி.

மேஷம்: இன்று உங்களுக்கு ஏதாவது ஒரு மனக்கவலை இதயத்தை பிடித்துக் கொண்டிருக்கும். தொழில் ரீதியான பணத்தை திரட்டுவதற்கு சற்று சிரமமாக இருக்கும். குடும்பத்தில் குழப்பம் நிலவும்.

ரிஷபம்: ஏதாவது ஒரு சிறிய தொழில் ஒன்றை தொடங்கலாம். இதற்காக அரசு கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. பள்ளிக் குழந்தைகள் படிப்பில் மிகவும் சுட்டியாக இருப்பார்கள். அரசு பணியாளருக்கு சற்று அலைச்சல் அதிகரிக்கும்.

மிதுனம்: எதிர்பாராத வகையில் பணம் உங்களை தேடி வரும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளலாம். வீட்டில் மழலைச் சத்தம் கேட்கும். கணினித்துறையில் ஒரு சரித்திரம் படைப்பீர்கள். பெரியோர்களின் அன்பு கிடைக்கும்.

கடகம்: நிறைவேறாத நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறும். பெண்கள் நகைகள் வாங்குவீர்கள். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். விருது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கணவன் மனைவி இடையிலான கருத்து வேற்றுமை அகலும்.

சிம்மம்: இன்றைய தினம் உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். தொழிலில் அதிகமான லாபம் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு இன்று கொண்டாட்டமான தினமாகும். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனை அனுபவிப்பீர்கள்.

கன்னி: இன்று வளர்பிறைச் சந்திரன் இருப்பதால் நஷ்டங்கள் குறையும். சிறு தோல்விகளால் மனம் சஞ்சலம் அடையும். எதிர்பார்த்த காரியம் சற்று தள்ளிப்போகும். தாய், தந்தை பிள்ளைகளுக்கான உறவு சுமூகமாக இருக்காது.

துலாம்: நீங்கள் விழுந்து, விழுந்து வேலை செய்தாலும் உங்கள் மீது மேல் அதிகாரிகள் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். அவர்களை திருப்திப்படுத்துவது கடினம். தொழிலாளர்கள் சற்று சிரமத்தை எதிர்பார்க்கலாம். வியாபாரிகள் பொருட்கள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும்.

விருச்சிகம்: நல்ல காரியங்கள் விரைவாக நடக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும் தொழிலை விரிவுபடுத்தலாம். அரசாங்கத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். பழைய கடனை அடைக்க ஒரு வழி பிறக்கும்.

தனுசு: தோல்விகள் உங்களை விட்டு விலகும். லாட்டரி யோகம் கிடைக்கும். இதமான பேச்சினால் எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். இனிப்பான செய்திகள் வரும்.

மகரம்: சிலர் தீங்கு செய்ய நினைப்பார்கள். பழைய பகை உங்களைப் பாதிக்கும். இருந்தாலும் தொழில்துறையில் ஏற்றம் காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் விரயச் செலவு ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

கும்பம்: யாருக்காகவும் வாக்குக் கொடுத்து ஏமாற வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். முக்கியமான முடிவுக¬ளை எடுப்பதை ஒரு நாள் தள்ளி வையுங்கள். தொழிலில் புதியதாக முதலீடு செய்ய வேண்டாம்.

மீனம்: வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க முடியாத தங்கம் இன்று வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கி அசத்துவீர்கள். இல்லாதவர்களுக்கு உதவி செய்வீர்கள். உயர் அதிகாரிகள் பாராட்பை பெறுவீர்கள்.

முந்தை செய்திகளை பார்க்க: Congress Win Parliment Election: பா.ஜ.க.வை நாங்கள் வீழ்த்துவோம்: ராகுல் காந்தி

முந்தை செய்திகளை பார்க்க:Kallakurichi Student To Hand Over Cell Phone: கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் யாருக்கு: சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு