Big Bash League Wickets Fell: ஆஸ்திரேலியா 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: 15 ரன்களுக்கு ஆட்டமிழந்த சிட்னி அணி

சிட்னி: ஆஸ்திரேலியா நாட்டில் மிகவும் பிரபலமான (Big Bash League Wickets Fell) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள் பிக்பாஷ் லீக் தொடரானது தற்போது நடந்து வருகிறது.

அதன்படி மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ், பிரிஸ்மென் ஹீட், கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ், சிட்னி தண்டர்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் உட்பட 8 அணிகள் மோதுகிறது.

இத்தொடரில் இன்று (டிசம்பர் 16) நடைபெற்ற போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி தண்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. முதலில் டாஸ் வென்ற அடிலெய்டு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலாவதாக களமிறங்கிய அடிலெய்டு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது. அதே போன்று எ அணியில் அதிகபட்சமாக கிறிஸ்லின் 36 ரன்களை எடுத்தது. காலின் டி கிராண்ட்கோம் 33 ரன்களை எடுத்தது. அதனை தொடர்ந்து 140 ரன்களுடன் விளையாடத் தொடங்கிய சிட்னி அணி தொடங்கிய முதலே அடுத்தடுத்தான விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது.

இதில் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், மேத்யூ கிளக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டானார்கள். அவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் அடிலெய்டு அணியின் வேகப்பந்து வீச்சுகளை சமாளிக்க முடியாமல் திணறியது மட்டுமின்றி அனைத்து விக்கெட்டுகளையும் பறிக்கொடுக்க நேர்ந்தது.

இறுதியாக 5.5 ஓவர் முடிவில் சொற்பமான 15 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் சிட்னி அணி படுமோசமான தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அடிலெய்டு அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. சிட்னி அணி மீது ரசிகர்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திகளை படிக்க:Opposition to Shah Rukh Khan’s film: இந்து மதத்தை புண்படுத்தும் ஷாருக்கான் படத்திற்கு எதிர்பு

முந்தைய செய்திகளை படிக்க:School Holiday: சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு