Congress Win Parliment Election: பா.ஜ.க.வை நாங்கள் வீழ்த்துவோம்: ராகுல் காந்தி

ராஜஸ்தான்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ராஜஸ்தானில் (Congress Win Parliment Election) பாத யாத்திரையை நடத்தி வரும் நிலையில், அவர் பேசும்போது குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பா.ஜ.க.வை நிச்சயம் காங்கிரஸ் வீழ்த்தும் என்று கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி தமிழகம், கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி முதன் முதலில் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையை தொடங்கி நடைபயிற்சி மேற்கொண்டார். அந்த யாத்திரையானது கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை கடந்து தற்போது காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கி ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார்.

அதன்படி இந்த யாத்திரையானது இன்று (டிசம்பர் 16) 100வது நாளை எட்டியுள்ளது. தவுசா பகுதியில் நடந்து வரும் இந்த யாத்திரையில், இமாச்சல முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு மற்றும் துணை முதலமைச்சர் முகேஷ் அக்னிஹோத்ரி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங், இவரது மகன் விக்ரமாதித்யா சிங் மற்றும் அம்மாநில எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், யாத்திரைக்கு இடையில் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, நீங்கள் வேண்டும் என்றால் குறித்து வைத்துக்கொள்ளுங்கம், பா.ஜ.க.வை நிச்சயமாக காங்கிரஸ் கட்சி வீழ்த்தும்.

மேலும், பா.ஜ.க.வினர் தனக்கு தனிப்பட்ட முறையிலும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் பல அவதூறுகளை பரப்பி வருகின்றனர். எங்கள் கட்சி வலுவிழந்து விட்டது என்ற கருத்தை பா.ஜ.க. பரப்பி வருகிறது. இதில் எதுவும் உண்மை இல்லை. வருகின்ற தேர்தலில் பா.ஜ.க.வை, காங்கிரஸ் கட்சி நிச்சயமாக வீழ்த்தும். இவ்வாறு அவர் கூறினார்.

இவரது கருத்து காங்கிரஸ் கட்சியினருக்கு சற்று உற்சாகத்தை கொடுத்தாலும், மீண்டும் பா.ஜ.க.வே மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்புகளும் ஒருபக்கம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திகளை படிக்க:Pen monument ban case: பேனா நினைவுச்சின்னம்: மத்திய, மாநில அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

முந்தைய செய்திகளை படிக்க:35 Lakes Were filled: தருமபுரி மாவட்டம் முழுவதும் 35 ஏரிகள் நிரம்பின: ஆட்சியர் தகவல்