35 Lakes Were filled: தருமபுரி மாவட்டம் முழுவதும் 35 ஏரிகள் நிரம்பின: ஆட்சியர் தகவல்

தருமபுரி டவுன், ராமக்காள் ஏரியினை (35 Lakes Were filled) மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் சாந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை பொறுத்தமட்டில் 361.00 மி.மீ. ஆகும். ஆனால் நடப்பாண்டில் மட்டும் 576.69 மி.மீ. மழை பெய்திருக்கிறது. தென் மேற்கு பருவமழை காலத்தில் இயல்பை விட 215.69 மி.மீ. கூடுதலாக மழை பெய்திருக்கிறது.

அது மட்டுமின்றி அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்திற்கு மட்டும் வட கிழக்கு பருவமழையின் சராசரி அளவு 316.70 மி.மீ. ஆகும். ஆனால் அக்டோபர் மாதம் முதல் நேற்று (டிசம்பர் 15) வரையில் மட்டும் 344.96 மி.மீ., மழை பெய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும், மாவட்டத்தில் ஊராட்சிகள் கட்டுப்பாட்டில் 546 ஏரிகளும், பேரூராட்சிகள் கீழ் 14 ஏரிகளும், பொதுப்பணித்துறை நீர்வளத்துறை, தருமபுரி வடிநிலக் கோட்டம் கட்டுப்பாட்டில் 74 ஏரிகள் என்று மொத்தமாக 634 ஏரிகள் உள்ளது.
நீர்வளத்துறையின் கீழ் சின்னாறு அணை, தொப்பையாறு அணை, கேசர்குளி அணை, தும்பலஅள்ளி அணை, நாகாவதி அணை, வரட்டாறு அணை, வாணியாறு அணை உட்பட 7 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டது.

அதே போன்று பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 74 ஏரிகளில் 35 ஏரிகள் முழுவதும் நிரம்பிவிட்டது. 10 ஏரிகள் 80 சதவீதமும், 14 ஏரிகள் 50 சதவீதத்திற்கு நீர் உள்ளது. அதே நேரம் ஏரி புனரமைத்தல் திட்டத்தின் வாயிலாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் காரிமங்கலம் திண்டல் ஏரி, பென்னாகரம் வரட்டுபள்ளம் ஏரி, அரூர் பெரிய ஏரி, பாலக்கோடு தொப்பைபள்ளம் ஏரி, பாப்பிரெட்டிப்பட்டி வாச்சாத்தி ஏரி உள்பட 6 ஏரிகளில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

முந்தைய செய்திகளை படிக்க:Arya Sayyeshaa daughter Ariana: முதல் முறையாக வெளியிடப்பட்ட ஆர்யா – சாயிஷாவின் மகள் கியூட் புகைப்படங்கள்

முந்தைய செய்திகளை படிக்க:Insure the paddy crop by 15th November : நவ. 15 ஆம் தேதிக்குள் நெற்பயிரை காப்பீடு செய்துகொள்ள அறிவுறுத்தல்