80 People Visit Sabarimala Every Minute: சபரிமலையில் நிமிடத்திற்கு 80 பேர் தரிசனம்

சபரிமலை: கேரள மாநிலம், சபரிமலையில் (80 People Visit Sabarimala Every Minute) ஒரு நிமிடத்தில் 80 பேர் படியேறி ஒவ்வொருவரும் மூன்று வினாடிகள் ஐய்யப்பனை தரிசனம் செய்கின்ற வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பத்தணந்திட்டை ஆட்சியர் திவ்யா எஸ்.அய்யர் கூறியுள்ளார்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக மாலை அணிந்து சென்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சபரிமலையில் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனிடையே தற்போது பெருந்தொற்று குறைந்ததால் அனைத்து வழிப்பாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் சென்று வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சபரிமலையில் வரலாறு காணாத வகையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு செல்கின்றனர். முன்பதிவு செய்தவர்கள் கோயிலுக்கு செல்வதற்கே பல மணி நேரங்கள் காத்துக்கிடக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், இது பற்றி பத்தணந்திட்டை ஆட்சியர் திவ்யா எஸ்.அய்யர் கூறியதாவது: சபரிமலையில் மண்டலகாலம் தொடங்கி 30 நாட்கள் கடந்திருக்கும் நிலையில் ஐய்யப்பனை சுமார் 20 லட்சம் பக்தர்கள் வணங்கிச் சென்றுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருமழை கொரோனா பெருந்தொற்று காரணமாக இப்பயணம் முடங்கியிருந்தது. ஆனால் இந்த ஆண்டு அனைத்தும் விலகியதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

மேலும், தரமான சாலைகள், 1855 குடிநீர் இணைப்புகள், 2,406 கழிவறைகள், 34 ஆயிரத்து 100 தங்குமிடங்கள் மற்றும் 2,000க்கும் அதிகமான பறக்கும் படையினர், நிலக்கல், பம்பை தடத்தில் 200 பஸ்கள் நடத்திய 39 ஆயிரம் சர்வீஸ்கள், துப்புரவு பணிக்கு என்று 1,000 பேர் என்று அனைத்து ஏற்பாடுகளும் சரியாக செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் ஒரு லட்சதுக்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதற்காக பல்வேறு அரசு ஊழியர்கள் சுமார் 18 ஆயிரம் பேர் உழைத்து வருகின்றனர்.

பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகமானதால் ஏற்படுகின்ற நெரிசலை தவிர்ப்பதற்காக தினமும் தரிசன எண்ணிக்கையை 90 ஆயிரமாக முதலமைச்சர் பினராயி விஜயன் குறைத்திருக்கிறார். இதனால் தரிசன நேரம் 19 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 18 படிகளில் ஒரு நிமிடத்துக்கு 80 பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

முந்தைய செய்தியை பார்க்க:Admk General Assembly Case: அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

முந்தைய செய்தியை பார்க்க:Congress Win Parliment Election: பா.ஜ.க.வை நாங்கள் வீழ்த்துவோம்: ராகுல் காந்தி