Central Govt Confirmed Not Linking Aadhaar: ஆதார் இணைக்காதவர்களுக்கு ஓட்டுரிமை இல்லையா? மத்திய அரசு புதிய தகவல்

டெல்லி: சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி என்று எந்த தேர்தல்களும் வந்தாலும் நேர்மையான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்கின்ற (Central Govt Confirmed Not Linking Aadhaar) நோக்கத்தில் வாக்காளர் அட்டையுடன் ஒவ்வொருவரும் ஆதார் அட்டையுடன் இணைக்கம் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்காக கடந்த ஆண்டு தேர்தல் சட்டங்கள், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கின்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு என்று சிறப்பு திட்டம் ஒன்றை கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் கமிஷன் அதற்கான வேலைகளை துரிதமான முறையில் மேற்கொண்டு வருகிறது.

இதற்கு என்று மாவட்டம், மற்றும் கிராமங்கள் தோறும் அரசு ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு என்று தனியாக முகாம்களும் அமைக்கப்பட்டு வந்தது. இதில் ஒரு சிலர் இணைக்காமல் உள்ளனர். அது போன்றவர்களுக்கு வாக்காளர் அட்டை நிராகரிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கின்ற நடவடிக்கைகள் பற்றி நாடாளுமன்ற மக்களவையில் எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று (டிசம்பர் 16) பதில் கூறியதாவது: வாக்காளர்கள் அடையாளத்தை நிறுவுகின்ற நோக்கத்தில் ஏற்கனவே இருக்கின்ற வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை விருப்பத்தின் அடிப்படையில் பெற்று பதிவு செய்வதற்கு வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம் அனுமதி அளித்திருக்கிறது.

ஒவ்வொரு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது என்பது விருப்பத்தின் பேரிலானது. மேலும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட படிவம் 6பில் ஆதார் அங்கீகாரத்திற்காக வாக்காளர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆதார் விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதலை திரும்ப பெறுவதற்கான எவ்வித வசதியும் கிடையாது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது விருப்பதின் பேரிலானது ஆகும். எனவே ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படாது. இவ்வாறு மத்திய சட்டத்துறை அமைச்சர் கூறினார்.

முந்தைய செய்தியை பார்க்க:Delhi-style murder in UP : டெல்லி பாணியில் உ.பி.யில் மனைவியின் உடலைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த கணவர்

முந்தைய செய்தியை பார்க்க:Victory Day For Defeating Pakistan In The War: பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய ராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு