This isnt Nehrus India: இது நேருவின் இந்தியா கிடையாது: ராகுல் காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி

டெல்லி:காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நாடாளுமன்ற தேர்தலை (This isnt Nehrus India) எதிர்கொள்வதற்காக தற்போது இருந்து பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன்படி ராஜஸ்தானில் இந்த யாத்திரை ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே பாதயாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல்காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அப்போது அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய, சீன படைகள் மோதிக்கொண்டது. இதில் சீன படைகளை இந்திய ராணுவம் துரத்தி அடித்தது. அது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் பதிலளித்த ராகுல்காந்தி சீனா முழுமையான போக்கு தயாராகிவிட்டது, ஆனால் இந்திய அரசு தூங்குகிறது என்றார். அது மட்டுமின்றி 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா கைப்பற்றியிருக்கிறது எனக் கூறினார்.

இந்நிலையில், ராகுல்காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்து வருகிறது. இது பற்றி பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறியதாவது: சீனாவுடன் நெருக்கம் இருப்பதாக ராகுல்காந்தி உணர்ந்து வருகிறார். சீனா என்ன செய்யும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் அங்கு நெருக்கமாக உள்ளார்.

மேலும், இந்திய பாதுகாப்பு மற்றும் எல்லை பகுதி குறித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவும், இந்திய வீரர்களின் துணிவை குறைக்கின்ற வகையில் ராகுல் காந்தி பேசியுள்ளார். ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தா நேருவின் இந்தியா கிடையாது. 1962 இந்தியா, சீனா மோதலை மேற்கோள்காட்டி, தூங்கிக் கொண்டிருந்தபோது 37 ஆயிரத்து 242 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை இழந்தது யார்? தற்போது தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள ராகுல்காந்தி தேசிய பாதுகாப்பு பற்றிய பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை கூறவேண்டாம். ராஜீவ்காந்தி அறக்கட்டளை சீனா கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து நிதியை பெற்றுள்ளது என பா.ஜ.க. குற்றம்சாட்டியது.

முந்தைய செய்தியை பார்க்க:Central Govt Confirmed Not Linking Aadhaar: ஆதார் இணைக்காதவர்களுக்கு ஓட்டுரிமை இல்லையா? மத்திய அரசு புதிய தகவல்

முந்தைய செய்தியை பார்க்க:35 Lakes Were filled: தருமபுரி மாவட்டம் முழுவதும் 35 ஏரிகள் நிரம்பின: ஆட்சியர் தகவல்