Pondicherry Cm Rangasamy Speech: எதுவுமே செய்ய முடியாத மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளேன்: புலம்பும் முதலமைச்சர் ரங்கசாமி

மாநில அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசிடம் (Pondicherry Cm Rangasamy Speech) பல முறை வலியறுத்தியுள்ளோம். ஆனால் இன்று வரையில் கிடைக்கவில்லை. நிர்வாக ரீதியிலான சிரங்கங்கள் எங்களுக்கு மட்டுமே தெரியும் என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. ஆதரவு அளித்து வருகிறது. இதனிடையே புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 60 அமைப்புகளின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ‘‘பிரெஞ்சிந்திய ஒப்பந்தத்தில் கூறியிருப்பதை செயல்படுத்தாமல் புதுச்சேரியின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு விட்டது. மேலும் இந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகிவிட்டதாக அரசின் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சொல்லியுள்ளனர்.

தற்போதைய நிலையில் புதுவை வளர்ச்சியின்றி மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்களால் நிறுவப்பட்ட அரசுக்கு எந்த ஒரு அதிகாரம் இல்லாமல் போய்விட்டது. மத்திய அரசு நியமிக்கப்படும் துணைநிலை ஆளுநர் ‘நிர்வாகி’ என்கின்ற நிலையில் அனைத்து வகையிலான முடிவுகளையும் எடுப்பவராகவே உள்ளார்.

மேலும், மத்திய உள்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் அரசுத் தலைமைச் செயலர் மற்றும் செயலர் உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசுக்கு எதிராகவே செயல்படுகின்றனர். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும், மதிப்பும் இல்லாமல் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதற்கு முடியாமல் அரசு முடங்கிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் பெறவேண்டிய சூழல் உள்ளது.

இதன் மூலமாக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான காலம் விரயம் ஆகியது. அது மட்டுமின்றி புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்குவதும் இல்லை. யூனியன் பிரதேச அரசு என்கின்ற காரணத்தினால் மத்திய நிதிக் குழுவில் சேர்க்கப்படாமல் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய போதிய அளவிலான நிதி கிடைக்கப்பெறுவதில்லை. தற்போதைய சூழலில் புதுச்சேரி அரசு 9650 கோடி கடனில் உள்ளது. பல முறை தனிமாநிலம் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரையில் அதன் மீது முடிவு எடுக்கப்பட வில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தற்போது புதுச்சேரியில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தி வருகிறது. ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி பகிரங்கமாக பா.ஜ.க. அரசால் நிர்வாகம் செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டை வெளிப்படையாக அறிவித்திருப்பது அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தியை பார்க்க:Pen monument ban case: பேனா நினைவுச்சின்னம்: மத்திய, மாநில அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

முந்தைய செய்தியை பார்க்க:Congress Win Parliment Election: பா.ஜ.க.வை நாங்கள் வீழ்த்துவோம்: ராகுல் காந்தி