Red Giant Has Also Bought The Distribution: ஒரு வழியாக வாரிசு படத்தின் விநியோக உரிமையை பெற்ற ரெட் ஜென்ட்

சென்னை: நடிகர் விஜய் நடித்த வாரிசு (Red Giant Has Also Bought The Distribution) திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக திட்டமிடப்பட்டது. ஆனால் அப்படத்திற்கு தமிழகம் முழுவதும் தியேட்டர் கிடைப்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. அதாவது நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் பொங்கல் அன்மே வெளியாக உள்ளது. அப்படத்தை உதயநிதி ஸ்டாலின் நிறுவனமான ரெட் ஜெயன்ட் வெளியிடுகிறது.

இதனால் ஏராளமான தியேட்டர்கள் துணிவு திரைப்படத்திற்கே ஒதுக்கப்பட்டதாக பேச்சுக்கள் எழுந்தது. இதனால் வாரிசு திரைப்படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை வரவழைத்து கடந்த ஒரு சில நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். ஒரு வேளை படம் வெளியாகவில்லை என்றால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்கின்ற வகையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் பேசப்பட்டதாக கூறப்பட்டது.

அது ஒரு புறம் இருக்க ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு வாரிசு படத்தை விற்பதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்ளவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு வாரிசு படத்தை விற்பதற்கு ஒப்பந்தம் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஆற்காடு உள்ளிட்ட 4 இடங்களில் வாரிசு திரைப்படத்தை வெளியிடும் உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பொங்கல் அன்று அஜித் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. இரண்டு படங்களையும் ரெட் ஜெயன்ட் நிறுவனமே தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளது. இதனிடையே கோடம்பாக்கம் வட்டாரங்களில் கடந்த ஒரு மாதமாக பேசப்பட்டு வந்த சம்பவம் இன்று முடிவுக்கு வந்ததாக சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. கடைசியில் வாரிசு திரைப்படக்குழுவும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்துடன் அடிப்பணிய நேர்ந்துள்ளது என்றே தெரிகிறது.

முந்தைய செய்தியை பார்க்க:Bigg Boss this weak double evition: ‘பிக்பாஸ் தமிழ் 6′ – இந்த வாரம் 2 வெளியேற்றம்

முந்தைய செய்தியை பார்க்க:Pondicherry Cm Rangasamy Speech: எதுவுமே செய்ய முடியாத மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளேன்: புலம்பும் முதலமைச்சர் ரங்கசாமி