Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (25.01.2023)

தருமபுரி: சுபகிருது ஆண்டு தை மாதம் 11ம் தேதி (Today Rasi Palan) புதன்கிழமை. சந்திர பகவான் கும்ப ராசியில் பயணம் மேற்கொள்கிறார். மாலை 6.47 மணி வரை சதுர்த்தி. பின்பு பஞ்சமி. அதிகாலை 3.21 மணி வரை சதயம். பின்னர் பூரட்டாதி. ஆயில்யம், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்: எதிர்பார்த்த வேலை கிடைக்கும். நண்பர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்து நன்மதிப்பை பெறுவீர்கள். சிக்கலான விஷயங்களை பெண்கள் மூலமாக தீர்த்து வைப்பீர்கள். விற்பனையில் கிடைத்த பணத்தை தொழிலில் முதலீடு செய்வீர்கள்.

ரிஷபம்: நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனை அடைவீர்கள். நண்பர்கள் மூலமாக புதிய தொழில் தொடங்குவீர்கள். வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். சுவாசப் பிரச்சனையை தீர்க்க எக்ஸ்ரே எடுப்பீர்கள்.

மிதுனம்: குடும்பத்திற்குள் இருந்த குழப்பத்தை நீக்கி குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். கவனக்குறைவாக வேலை செய்தால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவீர்கள்.

கடகம்: வாகனங்களில் செல்லும்போது செல்போன் பேச வேண்டாம். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். சிறுவர்களின் பழக்கத்தினால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். கடுமையாக முயற்சி செய்து கடனை அடைக்க நினைப்பீர்கள்.

சிம்மம்: வியாபாரிகள் பொருளாதார முன்னேற்றம் பெறுவீர்கள். கட்டிடத் தொழிலில் எலக்ட்ரீசியன்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கும். எதிர்கால நலனுக்காக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வீர்கள். பெண்களின் சேமிப்பை தக்க சமயத்தில் பயன்படுத்தி கொள்வீர்கள்.

கன்னி: நீண்ட தூரப் பயணத்தில் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். மாமியார் மருமகள் சண்டையால் மன நிம்மதியை இழப்பீர்கள். வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

துலாம்: மனதில் உள்ளதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்காமல் சற்று கஷ்டத்தில் இருப்பீர்கள். அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள ஆடம்பரமாகச் செலவு செய்ய வேண்டாம். நெருக்கமான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவீர்கள்.

விருச்சிகம்: கூட்டாகச் செய்யும் தொழிலில் கொள்ளை லாபம் பெறுவீர்கள். தொழிலை நிலைநிறுத்த பாடுபடுவீர்கள். நினைத்தது நிறைவேற நண்பர்களின் உதவி பெறுவீர்கள். மனைவி உங்களைப் புரிந்து கொண்டு மனதிற்கு இதமாக நடந்து கொள்வார்.

தனுசு: நண்பரின் பிரச்சினையைத் தீர்க்க காவல் நிலையம் செல்ல நேரிடும். தொழிலாளர் பற்றாக்குறையால் வேலையில் தொய்வு ஏற்படும். மேலதிகாரிகள் குறை சொல்லாத அளவிற்கு பணியில் கவனமாக இருப்பீர்கள். அடுத்தவரின் பேச்சைக் கேட்டு உங்கள் வேலையைக் கோட்டை விடாதீர்கள்.

மகரம்: வாக்குத் திறமையைக் காட்டி வேலைவாய்ப்பைப் பெறுவீர்கள். பொருளாதாரச் சரிவால் உறவினர்கள் மத்தியில் மரியாதை குறைவை சந்திப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் உதவி பெறுவீர்கள். வேலைப்பளு குறைந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்.

கும்பம்: கொடுத்த வாக்கைக் காப்பாற்ற குட்டிக்கரணம் அடிப்பீர்கள். வேலை விஷயமாக அலைச்சலால் பாதிக்கப்படுவீர்கள். கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள். ஜீரணக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். எடுத்த காரியம் உடனே நடக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். வண்டி வாகனக் கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள்.

மீனம்: ஞாபக மறதியால் நல்ல வாய்ப்பை கோட்டை விட நேரிடும். தானுண்டு வேலையுண்டு என்று இருந்தால் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள மாட்டீர்கள். வியாபாரத்தில் ஏற்ற நிலையை காண்பீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் அடைந்து மன நிம்மதியை பெறுவீர்கள்.