Gold Rate Increase: தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை நெருங்குவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக (Gold Rate Increase) காணப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 2022, டிசம்பர் மாத இறுதி சமயத்தில் ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்தை கடந்த நிலையில் தொடர்ந்து விலை உயருவதும், குறைவதுமான நிலையிலேயே நீடித்து வந்தது.

ஆனால் பெரும்பாலும் தங்கம் விலை அதிகரித்தபடியே இருந்தது. அதன்படி, கடந்த 9ம் தேதி விலை உயர்ந்து ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்தையும் கடந்தது. அதற்கு அடுத்த நாளே விலை குறைந்து, ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் சென்றாலும், தொடர்ச்சியாக விலை உயர்ந்து கடந்த 13-ம் தேதி மீண்டும் ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறிது இடையில் ஓரளவுக்கு விலை குறைந்து காணப்பட்டாலும், பெருமளவில் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை இருந்தது. அந்த வகையில் நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 323-க்கும், ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்து 584-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதே நிலை நீடித்தால், இன்று (ஜனவரி 25) அல்லது நாளையோ (வியாழக்கிழமை) ஒரு பவுன் தங்கம் ரூ.43 ஆயிரத்தை தொட்டுவிடும் என கூறப்பட்டுள்ளது. இந்த திடீர் ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.