Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (14.01.2023)

தருமபுரி: சுபகிருது ஆண்டு மார்கழி மாதம் 30ம் தேதி (Today Rasi Palan) சனிக்கிழமை. சந்திர பகவான் கன்னி ராசியில் பயணம் மேற்கொள்கிறார். மாலை 3.18 மணி வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. பிற்பகல் 2.45 மணி வரை அஸ்தம். பின்னர் சித்திரை. பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்: சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சி தரும்.

ரிஷபம்: புதிய முயற்சிகளில் கவனம் தேவை. பொறுமை அவசியம். சிறு சங்கடம் ஏற்பட்டு நீங்கும். யாரோடும் விவாதம் செய்யாமல் அனுசரித்துச் செல்வது நல்லது.

மிதுனம்: மனதில் சின்னச் சின்னக் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் செலவுகள் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம்.

கடகம்: புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுக்கும் வாய்ப்புண்டு.

சிம்மம்: எதிலும் வெற்றியே ஏற்படும். குடும்பத்தினரால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

கன்னி: எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் சாதகமாக முடிந்துவிடும். குடும்பத்திலிருந்த பிணக்குகள் நீங்கும். குடும்பத்தினரின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது.

துலாம்: கைவசம் பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை ஆலோசித்து எடுப்பது நல்லது. உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்புண்டு.

தனுசு: குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயன் தரும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

மகரம்: உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உறவினர்களால் செலவுகள் ஏற்படும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும்.

கும்பம்: இன்று நேரமும் பணமும் விரயமாகும். ளுங்கள் அறிவுரையை அனைவரும் ஏற்றுக்கொள்வார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்றாலும் நிதானமாகச் செயல்படுவது நல்லது.

மீனம்: அனுகூலமான நாள். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். குடும்பத்தினரால் ஆதாயம் கிடைக்கும். உறவினர்கள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள்.