Z Wing Security: பயங்கரவாதிகளிடம் இருந்து மிரட்டல் எதிரொலி: அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

சென்னை: தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை (Z Wing Security) கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். இவர் கர்நாடகா மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு காரணமாக பதவியில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் கரூர் மாவட்டத்தில் உள்ள தனது வயல் வெளியில் சில மாதங்கள் வேலை பார்த்து வந்தார்.

அப்போது அவர் பா.ஜ.க.வில் இணைந்த சில நாட்களிலேயே துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அப்போது மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றார். இதனால் மாநில தலைமை பதவி காலியாக இருந்த நிலையில் அதில் அண்ணாமலை அமர வைக்கப்பட்டார். இதனால் மாநிலம் முழுவதும் கட்சி பணிக்காக சென்று தீவிர களப்பணி ஆற்றி வருகிறார். மாவோயிஸ்ட் மற்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து அண்ணாமலைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் கிடைத்தது.

இந்நிலையில், தற்போது ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பில் உள்ள அண்ணாமலைக்கு இசட் பிரிவாக மாற்றி வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 30-க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.