Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (13.01.2023)

தருமபுரி: சுபகிருது ஆண்டு மார்கழி (Today Rasi Palan) மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை. சந்திர பகவான் கன்னி ராசியில் பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 3.00 மணி வரை சஷ்டி. பின்னர் சப்தமி. பிற்பகல் 1.52 மணி வரை உத்திரம். பின்னர் அஸ்தம். சதயம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்: குடும்பத்தில் இருந்த சில கருத்து வேறுபாடுகள் நீங்கும். காதலியிடம் உங்கள் காதலை வெளிப்படுத்துவீர்கள். புதிய நண்பர்களிடம் தொழில் ரகசியங்களை சொல்ல வேண்டாம். தாயாருக்கு மருத்துவ செலவு செய்வீர்கள்.

ரிஷபம்: எதிர்பார்த்து ஏமாற நேரிடும். அரசு வேலை வாய்ப்பு பெறுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கை யால் மனச் சங்கடத்தை அடைவீர்கள். சிறு வியாபாரிகள் சிறப்பான லாபம் பெறுவீர்கள். கடுமையாகப் பேசி காதலில் விரிசலை உண்டாக்குவீர்கள்.

மிதுனம்: நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு இன்று கிடைக்கும். தொந்தரவு கொடுத்து வந்த நோயிலிருந்து விடுபடுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடிய வைப்பீர்கள். அலைச்சல் அதிகம் ஆனாலும் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள்.

கடகம்: வலியச் சென்று வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம். விருப்பமில்லாத இடத்திற்கு மாறுதல் செய்ய நேரிடும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கவலைப்படுவீர்கள். வாடிக்கையாளர்களுக்கு சரக்குகள் அனுப்புவதில் தாமதம் ஏற்படும். மனைவியின் கோபத்தை குறைப்பீர்கள்.

சிம்மம்: புதிய வீடு கட்டுவதற்கு முயற்சி செய்வீர்கள். பழைய வீட்டைப் புதுப்பிக்க நேரிடும். காண்ட்ராக்ட் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வங்கியில் லோன் கிடைக்கும். கட்டிடத் தொழிலாளர்கள் கடின வேலையால் அதிக லாபம் பார்ப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள்.

கன்னி: அடுத்தவர் பிரச்சனைக்கு தீர்வு சொல்லிவிட்டு ,உங்கள் விஷயத்தில் கோட்டை விடுவீர்கள். வேலையில் உள்ளவர்கள் புதிய பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். சாமர்த்தியமாக நடந்து குடும்ப விவகாரங்களைச் சரி செய்வீர்கள். ஒன்றாக வேலை செய்பவரிடம் சண்டை போடாதீர்கள்.

துலாம்: வேலையாட்கள் பற்றாக்குறையால் கூடுதல் பொறுப்புகளை சுமக்க நேரிடும். வியாபாரம் மந்த நிலையில் இருப்பதால் மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள். தொழிற்சாலையில் மின்சாரத் தடையால் உற்பத்தி பாதிப்பை சந்திப்பீர்கள். காதலியின் கோபத்தை மாற்றி இதமாக நடந்து கொள்வீர்கள். திருமண முயற்சிகளை சாதகமாக முடிப்பீர்கள்.

விருச்சிகம்: ஆடை ஆபரணங்கள் வாங்க கடன்படுவீர்கள். கணினித்துறையில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். நிலம் வாங்கி விற்பதில் லாபத்தை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகி வயிற்றுக் கோளாறால் அவதிப்படுவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

தனுசு: அரசுப்பணியாளர்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். கலைத்துறையினர் பெரும் புகழ் அடைவீர்கள். மனைவியின் ஒத்துழைப்பால் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றிகண்டு வியாபாரத்தில் வேகம் காட்டுவீர்கள். வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள்.

மகரம்: திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை தடையில்லாமல் நடத்துவீர்கள். தவறாகப் புரிந்து கொண்டு நண்பர்களைக் காயப்படுத்தி விடாதீர்கள். உதவி செய்வதன் மூலம் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

கும்பம்: வியாபாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். தனியார் துறையில் வீண் அலைச்சலும், டென்ஷனாலும் உங்கள் மன நிம்மதியை இழப்பீர்கள். வெளியூர் பயணங்களை தள்ளி வையுங்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.

மீனம்: குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு புதிய தோழிகள் கிடைப்பார்கள். மாணவர்கள் பாதியில் நிறுத்திய கல்வியைத் தொடர்வார்கள். அலைச்சல் அதிகமானாலும் புதிய ஆர்டர்கள் பெறுவதில் வெற்றி காண்பீர்கள்.