Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (30.12.2022)

சென்னை: சுபகிருது ஆண்டு (Today Rasi Palan) மார்கழி மாதம் 15ம் தேதி வெள்ளிக்கிழமை 30.12.2022. சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 1.43 மணி வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று மாலை 5.25 மணி வரை உத்திரட்டாதி. பின்பு ரேவதி. மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று பொறுப்புடனும், கவனமுடனும் நடந்து கொள்வது அவசியமாகும்.

மேஷம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும்ல சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள், அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கம்.

ரிஷபம்: புதிய முயற்சி சாதகமாகும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்குப் புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புண்டு. முக்கிய முடிவுகளில் கவனம் தேவை.

மிதுனம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு, உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை தேவை.

கடகம்: எதிலும் பொறுமை அவசியம். முக்கிய முடிவுகளில் கவனம் தேவை. உறவினர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம், இறைவழிபாடு தேவை.

சிம்மம்: புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இறைவழிபாடு தேவை.

கன்னி: தேவையான பணம் இருப்பதால் செலவுகளை சமாளித்துவிடுவீர்கள். உறவினர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள், குடும்பத்திலிருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

துலாம்: அனுகூலமான நாள், எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு உண்டு.

விருச்சிகம்: மகிழ்ச்சி தரும் சம்பவங்களின் நிகழும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும், என்றாலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.

தனுசு: எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும், எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வீட்டிலும் வெளியிலும் பேசும்போது பொறுமை அவசியம்.

மகரம்: மகிழ்ச்சியான நாள், குடும்பப் பொறுப்புகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உங்கள் முயற்சிக்குப் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்பம்: தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும் என்றாலும் உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மீனம்: புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளில் ஆலோசனை அவசியம். உறவினர்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு.