Heeraben Modi passes away:பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்

குஜராத்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாயார் (Heeraben Modi passes away) ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் காலமானார்.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக உடல் நலம் பாதிக்கப்பட்ட ஹீராபென் மோடி 99, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை பிரதமர் மோடி நேற்று (டிசம்பர் 29) மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். விரைவில் குணமடைவார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹீராபென் மோடி இன்று (டிசம்பர் 30) அதிகாலை உயிரிழந்தார்.

இது பற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் உறுதி செய்துள்ளார். அதில் “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது” என பிரதமர் மோடி உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு உலகத் தலைவர்கள் மற்றும் இந்திய அரசியல் கட்சியின் தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.