Pm Modi Melting Mother: புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது: பிரதமர் மோடி உருக்கமான பதிவு

குஜராத்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (Pm Modi Melting Mother) 100. இவர் குஜராத் மாநிலம், காந்திநகரில் தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்த நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் அவர் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ‘‘அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போதைய நிலையில் அவரது உடல் நிலை சீராக இருக்கிறது என கூறப்பட்டிருந்தது.

மேலும், பிரதமர் மோடி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று தனது தாயார் ஹீராபென் மோடியின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் இன்று காலை (டிசம்பர் 30) உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது. இது பற்றி தனது ட்விட்டர் பதிவிலும் பிரதமர் மோடி உறுதிப்படுத்தியிருந்தார். மேலும், இது பற்றி அவர் உறுக்கமாக பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில் ‘‘ ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன். 100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார்.

புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது’’ என உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது ட்விட்டர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இணையத்திலும் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.