Varisu song is a world record: வாரிசு படத்தின் ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடல் உலக சாதனை

சென்னை: Fans are celebrating as the song from Vaarisu hit number 1 worldwide. வாரிசு படத்தின் பாடல் உலகளவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படம் இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகும் வாரிசு படத்தின் பாடல்கள் வைரலாகி வருகிறது. விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் திரு ராஜு தயாரிக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன்.கே.எல் இசையமைக்கிறார்.

விஜய்யைத் தவிர, வாரிசு படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷியாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பு, மற்றும் சங்கீதா கிரிஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடும் இந்தப் படம், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த ஆடியோ லாஞ்ச், ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இதனால் போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீசார் ஒருவர் காயமடைந்தார். இதனைத்தொடர்ந்து ரசிகர்களை போலீசார் விரட்டியடிக்க ஆரம்பித்தனர்.

இதனையடுத்து ஆடியோ வெளியீட்டு விழாவில் பாஸ் இருந்தும் ரசிகர்கள் காண முடியாமல் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில், வாரிசு ஆல்பத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடல் உலகளவில் நம்பர் 1 இடத்தை பிடித்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பில்போர்ட் அறிவித்துள்ளது. இதனை தற்போது ரசிகர்களால் கொண்டாடி வருகிறார்கள்.