Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (29.12.2022)

சென்னை: சுபகிருது ஆண்டு மார்கழி (Today Rasi Palan) மாதம் 14ம் தேதி வியாழக்கிழமை 29.12.2022. சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 3.16 மணி வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று மாலை 06.07 மணி வரை சதயம். பின்பு உத்திரட்டாதி. ஆயில்யம், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம்: எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். என்றாலும் சிக்கன நடவடிக்கை தேவை, முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

ரிஷபம்: காரியங்கள் அனுகூலமாகும், சகோதரர்கள் கேட்கும் உதவியைச் செய்து கொடுப்பீர்கள். மாலையில் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும்.

மிதுனம்: திடீர் செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

கடகம்: மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். குடும்பத்தினர் வழியில் செலவுகள் ஏற்படும், எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும், இறைவழிபாடு தேவை.

சிம்மம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள், உறவுகளால் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும், பிற்பகலுக்கு மேல் நிதானம் தேவை, வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

கன்னி: முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள், சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு அத்தியாவசிய பொருள்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும், காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்படலாம்.

விருச்சிகம்: மகிழ்ச்சியான நாள் என்றாலும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

தனுசு: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும், எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். எதிர்பாராத ஆதாயமும் கிடைக்கும், நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

மகிழ்ச்சி: குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அவர்களின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள், சிலருக்குப் பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.

கும்பம்: சேர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் நற்செய்தி கிடைக்க வாய்ப்புண்டு. புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது.

மீனம்: சொல்லிலும் செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள், எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.