Park Dedicated To G 20 Countries: ஜி20 நாடுகளை வரவேற்க தயாராகும் பூங்கா

டெல்லி: ஜி20 சர்வதேச (Park Dedicated To G 20 Countries) உச்சி மாநாடு அடுத்த ஆண்டு 2023ல் நடைபெறுகிறது. இதற்காக டெல்லி சாணக்யபுரியில் சிறப்பு பூங்காவை உருவாக்க உள்ளது. இந்த பூங்கா முழுமையாக ஜி20 நாடுகளுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகளை வரவேற்க ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது. அதன்படி முதற்கட்டமாக சாணக்யபுரியில் சிறப்பு பூங்காவை அமைத்து வருகிறது. இது வேஸ்ட்டு வொண்டர் என்ற கருப்பொருளில் அமைக்கப்பட உள்ளது. சோலார் மூலமாக ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது.

மேலும் ஜி20 நாடுகளின் தேசியக் கொடிகளும், கழிவுகளால் செய்யப்பட்ட தேசிய விலங்குகளின் உருவங்களும் பூங்காவில் காட்சியப்படுத்தப்படும். இதனுடன் ஜி20 நாடுகளை கவுரவிக்கும் வகையில் சிறப்பு உணவு திருவிழாவும் நடைபெற உள்ளது. இதனை அனைத்தும் கருத்தில் கொண்டு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் இதற்கான பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.