One Nation One Election: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: மத்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம்

டெல்லி: நாடு முழுவதும் ஒரேநாடு ஒரே தேர்தல் (One Nation One Election) தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கருத்து கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்தனர். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அ.தி.மு.க. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருக்க அனுமதிக்கக் கூடாது என்றார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்தது. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது சரிதான் என்ற தீர்ப்பை கொடுத்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் சார்பாக மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் ஜனவரி வரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய சட்ட ஆணையம் சார்பில் கருத்து கேட்டு கடிதம் ஒன்றை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது அடுத்த மாதம் ஜனவரி 16ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் தற்போது ஓ.பி.எஸ். அணியில் உள்ளவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியதாகவே அமைந்துள்ளது. ஏன் என்றால் இன்று வரை நான் தான் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பி.எஸ். தன்னுடைய கடிதங்களில் குறிப்பிட்டு வருகிறார். ஆனால் மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளது.