Vijayakanth meeting: புத்தாண்டு அன்று தொண்டர்களுடன் விஜயகாந்த் சந்திப்பு

சென்னை: It has been announced that DMDK leader Vijayakanth will meet the party workers on English New Year. ஆங்கில புத்தாண்டு அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சித் தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் கொடிகட்டி பறந்தவரும், தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்களுக்கு எதிராக கலக்கியவர். இவர் கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு விருத்தாசலம் தொகுதியில் வெற்றியை பெற்றவர். தே.மு.தி.க வேட்பாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் கணிசமான வாக்குகளை பெற்றார்.

முதல் தேர்தலிலேயே (2006-ம் ஆண்டு) 10 சதவீத வாக்குகளை பெற்ற தே.மு.தி.க. பின்னர் 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும் தனித்தே சந்தித்தார். இந்த தேர்தலிலும் தே.மு.தி.க. பெருவாரியான ஓட்டுகளை பெற்றது. 9-ல் இருந்து 10 சதவீத ஓட்டுகள் இந்த தேர்தலிலும் கிடைத்தன. மேலும் அடுத்தடுத்து தேர்தலில் விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அந்த கட்சியின் வாக்கு வங்கியும் பாதியாக குறைந்தது.

இதனையடுத்து விஜயகாந்தின் உடல்நிலை பாதித்த நிலையில் அந்த கட்சியில் இருந்த பெரும்பாலனோர் மாற்று கட்சியில் இணைந்தனர். மேலும் அவரது உடல்நிலையில் அவர் பொதுவெளியிலும் வெளிப்படாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாத நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே தற்போது கட்சியை வழி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஒவ்வொரு புத்தாண்டு அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களை சந்தித்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தொண்டர்களை சந்திக்கவுள்ளதாகவும் தொண்டர்கள் விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.