Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (28.12.2022)

இன்று மார்கழி மாதம் 13ம் தேதி, டிசம்பர் 28, புதன்கிழமை, (Today Rasi Palan) சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். இன்று புதன் மகர ராசியில் நுழைகிறார். மகர ராசியில் புதன் மற்றும் சனி, சந்திரன் ஆகிய 3 கிரகங்களும் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் இன்று மகர ராசிக்காரர்களுக்கு நல்ல நாளாக அமையும்.

மேஷம்: சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும், ஆனால், புதிய முயற்சிகளில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.

ரிஷபம்: புதிய முயற்சிகளை ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது. எதிலும் பொறுமை அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

மிதுனம்: குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு இருக்காது. இறைவழிபாடு கட்டாயம் தேவை.

கடகம்: புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.

சிம்மம்: சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் தேவையற்ற மனவருத்தம் ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. செலவுகள் அதிகரிக்கும்.

கன்னி: புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் முடிந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.

துலாம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள், சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் நன்கு சிந்தித்து ஈடுபடவும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்: தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.

தனுசு: நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். குடும்பத்தினரால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உறவுகளால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு மாறும். பணிச்சுமை இருக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடைபெறும்.

மீனம்: அனுகூலமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். குடும்பத்தினர் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.