Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (25.12.2022)

சென்னை: சுபகிருது ஆண்டு மார்கழி (Today Rasi Palan) மாதம் 10ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை 25.12.2022. சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் மேற்கொள்கிறார்.

மேஷம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும், குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் உண்டாகும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். உங்கள் முயற்சிக்கும் குடும்பத்தினர் ஆதரவு தருவர்.

ரிஷபம்: மேல் நன்மைகள் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள், துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள், எடுத்த காரியத்தை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்: பிற்பகலுக்கு மேல் செயல்களில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இறைவழிபாடு தேவை.

கடகம்: அனுகூலமாக முடியும். குடும்பத்தினரால் சில சங்கடம் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு எதுவுமிருக்காது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்: புதிய முயற்சிகளில் கவனம் தேவை. குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளியிடங்களில் சாப்பிடுவதைக் தவிர்க்கவும். அஜீரணம், அலர்ஜி ஏற்படலாம்.

கன்னி: பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படும். சகோதர வகையில் சிறு சங்கடம் ஏற்பட்டு நீங்கும்.

துலாம்: குழப்பங்கள் நீங்கி மனதில் உற்சாகம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடிய வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்: புதிய முயற்சிகளில் கவனம் தேவை. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும், என்றாலும் யாரோடும் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

தனுசு: காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள், உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.

மகரம்: எதிர்பாராத பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்பட்டுத் திணற வைக்கும். காரியங்களில் இழுபறி நிலை மாறும். அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம்: உற்சாகமான நாள், காரியங்கள் அனுகூலமாகும். பொறுப்புகளைக் குடும்பத்தினர் பகிர்ந்து கொள்வது ஆறுதலாக இருக்கும். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும்.

மீனம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்புண்டு. சிலர் புதிய ஆடைகள் வாங்குவீர்கள், சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.