Minister Duraimurugan admitted to Apollo Hospital அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் அமைச்சரை கலாய்த்த துரைமுருகன்
முன்னாள் அமைச்சரை கலாய்த்த துரைமுருகன்

சென்னை: Minister Duraimurugan admitted to Apollo Hospital in chennai. அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று உடல் நலக்குறைவால் சென்னையிலுள்ள அப்போலோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துரைமுருகனுக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சையை தொடர்ந்து, அவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பும் சென்னை விமான நிலையத்தில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக பயணத்தை கேன்சல் செய்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வந்தார். இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நள்ளிரவு 1.30 மணியளவில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த மருத்துவமனை அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.