President of India’s greetings on the eve of Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

புதுடெல்லி: The President of India, Smt. Droupadi Murmu has sent her greetings to all fellow citizens on the eve of Christmas. குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, “நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பண்டிகையானது மொத்த மனிதகுலத்திற்கும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் சின்னமாக விளங்குகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் மற்றும் தியாகத்தின் முக்கியத்துவத்தை நாம் நினைவுகூருவோம். கிறிஸ்துமஸ் பண்டிகை ஒருவரையொருவர் அன்புடனும், கருணையுடனும் நடத்த வழி காட்டுகிறது.

இயேசு கிறிஸ்துவின் தெய்வீக போதனைகளை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ள உறுதிமொழி எடுப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து:

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: “புனிதமான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயேசு கிறிஸ்து அன்பு, பரிவு மற்றும் கருணை ஆகியவற்றின் வழியை நமக்குக் காட்டியுள்ளார். இது நமது வாழ்க்கையை நல்லொழுக்கம் உள்ளதாக்குகிறது. அத்துடன் சமூகத்தில் சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருகிறது. இது உலகில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாம், இணக்கமான, சகிப்புத்தன்மையுடன் கூடிய மற்றும் அமைதியான சமுதாயத்திற்காகப் பாடுபடுவோம்.”

இவ்வாறு தமது வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் துணைத் தலைவர் கூறியுள்ளார்.