Today Horoscope : இன்றைய ராசிபலன் (21.07.2022)

Astrology : வியாழக்கிழமை உங்களின் ராசிபலன் எப்படி உள்ளது என்பதனை (Today horoscope) அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்:
(Astrology) பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசியுங்கள். உங்களை அறியாமல் உங்கள் கருத்துகள் வேறொருவரின் சென்டிமெண்டை காயப்படுத்தலாம். வெளிநாட்டில் கிடக்கும் உங்கள் நிலத்தை இன்று நல்ல விலையில் விற்கலாம், இது உங்களுக்கு லாபம் தரும். உங்கள் அழகும் பர்சனாலிட்டியும் சில புதிய நண்பர்களை உருவாக்க உதவியாக இருக்கும். அன்புக்குரியவருடன் இனிப்புகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. வேலையில் கவனம் செலுத்தினால் வெற்றியும் அங்கீகாரமும் உங்களுக்குக் கிடைக்கும். நேரத்தின் பலவீனத்தை உணர்ந்து, இன்று நீங்கள் எல்லோரிடமிருந்தும் தனிமையில் நேரத்தை செலவிட விரும்புகிறீர்கள். அவ்வாறு செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும். இன்று உங்கள் துணை உங்கள புகழ்ந்து மீண்டும் உங்கள் மேல் காதல் வயப்படுவார்.

ரிஷபம்:
நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். கிரியேட்டிவ் துறையில் இருப்பவர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புகழும் அங்கீகாரமும் கிடைக்கும் என்பதால் வெற்றிகரமான நாள். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் என்பதால் பலன் தரக் கூடிய நாள். நீங்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போவீர்கள். இன்று இனிமையான வரத்தால் அசீர்வதிக்கப்படுவீர்கள்.

மிதுனம்:
உடல் ஆரோக்கியத்தைக் கவனித்து ஒழுங்குபடுத்துங்கள். உங்கள் பணம் எங்கு செலவிடப்படுகிறது என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகள் மீது கவனம் தேவைப்படும். உங்கள் நண்பரை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்திக்கப் போகிறோம் என்ன எண்ணம், இதயத் துடிப்பை அதிகரிக்கும். வேலையில் நல்ல வாய்ப்புகளைத் தேடி மேற்கொள்ளும் பயணம் பாசிடிவான பலன்களைத் தரும். நேர்காணலின் போது நீங்கள் கட்டுப்பாடாக இருந்து உங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். டிவி, மொபைல் ஆகியவற்றைப் பயன்படுத்துவது தவறல்ல, ஆனால் தேவையானதை விட அதிகமாகப் பயன்படுத்துவது உங்களுக்கு தேவையான நேரத்தைக் வீணடிக்கும். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் தனிச்சிறப்பான நாளாக இருக்கும்.

கடகம்:
(Astrology) உங்களின் அதீத நம்பிக்கையும் எளிதான வேலை அட்டவணையும் இன்றைக்கு ரிலாக்ஸ் பண்ண அதிக நேரத்தை உருவாக்கித் தரும். எங்காவது முதலீடு செய்தவர்கள் இன்று நிதி இழப்பை சந்திக்க நேரிடும். உறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. ரகசிய விவகாரங்கள் நற்பெயரை கெடுத்துவிடும். வேலை ஊதியத்துடன் தொடர்புடையவர்கள் இன்று துறையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இன்று, நீங்கள் தவறு செய்ய விரும்பாவிட்டாலும், உங்கள் மூத்தவர்களின் சுமைகளை நீங்கள் தாங்க வேண்டியிருக்கும். வணிகர்களுக்கு நாள் சாதாரணமாக இருக்கும். நாவலைப் படித்து நாளைக் கழிக்கலாம். உங்கள் துணை உங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட கூடும்.

சிம்மம்:
இன்று சிக்கலான சூழ்நிலையை சந்திக்கும்போது, உங்களின் மன உறுதிக்கு இன்று பரிசு கிடைக்கும். உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கும்போது நிதானத்தை இழந்துவிடக் கூடாது. உங்கள் பணத்தை சேமிக்க வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் வாழ்கைதுணைவியார், பெற்றோரிடம் கலந்து உரையாடல் வேண்டும் ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும். எனவே இரவு தாமதமாக வருவது, பிறருக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கவும்.நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் கலந்து பேசுவது உங்களுக்கு நல்ல ஐடியாக்களையும் பிளான்களையும் தரும். ஒவ்வொரு பணியையும் அவ்வப்போது முடிப்பது நல்லது. நீங்கள் இதைச் செய்தால், உங்களுக்கான நேரம் ஒதுக்கலாம். ஒரு புதிய நபரால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும்.

கன்னி:
பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும். அதிக சக்தியும் அதீத உற்சாகமும் சாதகமான ரிசல்ட்களைக் கண்டு வந்து வீட்டில் டென்சனைக் குறைக்கும். உடன் யாரும் இல்லாவிட்டால் – உங்கள் புன்னகைக்கு அர்த்தம் கிையாது – சிரிப்புக்கு சப்தம் இல்லை துணிச்சலான ஸ்டெப்களும் முடிவுகளும் சாதகமான ரிவார்டுகளைக் கொண்டு வரும். நண்பருடன் நீங்கள் இன்று நேரத்தை செலவிட முடியும். வேலை அழுத்தத்தால் உங்கள் திருமண வாழ்க்கை சில காலமாக பாதித்து வருகிறது. ஆனல் இன்று அந்த பாதிப்பு நீங்கும்.

துலாம்:
(Astrology) உங்கள் சகோதர சகோதரிகள் யாரேனும் உங்களிடம் பணம் கடனாக கேட்க கூடும், நீங்கள் அவர்களுக்கு கடன் கொடுப்பீர்கள் இருப்பினும் உங்கள் பொருளதாரத்தில் பாதிப்பு ஏற்படும். வீட்டு சூழ்நிலையில் சாதகமான சில மாற்றங்களை செய்வீர்கள். உங்களை மகிழ்விக்கும் செயல்களை உங்கள் அன்புக்குரியவர் செய்வார். உங்கள் பிளான்களின்படி செயல்படுவதற்கு பார்ட்னரை சமாதானம் செய்வதில் கஷ்டப்படுவீர்கள். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய நிறைய பிரச்சினைகள் இருக்கும். உங்களுக்கு உங்கள் வாழ்க்கை துணைக்கும் இன்று ஒரு இனிமையான தகவல் வந்து சேரும்.

விருச்சிகம்:
சில பின்னடைவுகள் ஏற்படலாம். மஇந்த பின்னடைவு படிக்கற்களாக அமையட்டும். உறவினர்களும் நெருக்கடி நேரத்தில் உதவி செய்வார்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். ஒன்றுமில்லாத விஷயத்தை வீட்டில் உங்கள் குழந்தைகள் உங்களிடம் கூறலாம். எந்த ஆக்சனும் எடுப்பதற்கு முன்பு உண்மைகளை வெரிபை செய்யுங்கள். நீங்கள் துறையில் சிறப்பாகச் செய்ய விரும்பினால், உங்கள் வேலையில் நவீனத்துவத்தைக் கொண்டுவர முயற்சிக்கவும். இதனுடன், புதிய தொழில்நுட்பத்துடன் புதுப்பித்துக் கொள்ளுங்கள். இன்று, உங்கள் துணையுடன் இன்பமாக மாலை பொழுதை கழிப்பீர்கள்.

தனுசு:
அளவுக்கு அதிகமான பயணம் ஆத்திரத்தை ஏற்படுத்தும். உங்கள் மனைவியுடன் சேர்ந்து, நீங்கள் எதிர்காலத்திற்கான பொருளாதார திட்டத்தை உருவாக்கலாம், மேலும் இந்த திட்டமும் வெற்றிகரமாக இருக்கும். மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும். காதலுக்குரியவரின் கைகளில் ஆதரவை உணர்வீர்கள். சீனியர் லெவலில் உள்ளவர்களுடன் சில எதிர்ப்புகள் ஏற்பட்டாலும், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியது முக்கியம். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். இன்று உங்கள் இருவரின் பழைய நண்பர் உங்களை சந்தித்து உங்கள் துணையை பற்றிய சில ஸ்வரஸ்யமன நினைவிகளை உங்களுடன் பகிர்வார்.

மகரம்:
( Astrology) உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள், குறிப்பாக ரத்த அழுத்த நோயாளிகள். உங்கள் நண்பர்கள் யாராவது உங்களிடம் பெரிய தொகை கடன் கேட்க கூடும், நீங்கள் அவர்களுக்கு கடன் கொடுப்பதால் அதிக கவலை கொள்வீர்கள். உங்கள் பிள்ளைகளுடன் ஆரோக்கியமான உறவை ஊக்குவித்திடுங்கள். கடந்த காலத்தை மறந்திடுங்கள். பிரகாசமான மகிழ்ச்சியான எதிர்காலத்தைக் காணுங்கள். உங்கள் முயற்சிக்குப் பலன் கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவருடன் பிக்னிக் சென்று மதிப்புமிக்க நினைவுகளை மறுபடி கொண்டு வாருங்கள். உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் வேண்டும். திருமண வாழ்வில் உண்மையான இன்பத்தை நீங்கள் இன்று அடைவீர்கள்..

கும்பம்:
பிரச்சினைகளை மறந்து குடும்பத்தினருடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கையாளும் விதம் உங்களுடன் பணிபுரியும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம் – ஆனால் உங்களிடம் சொல்ல மாட்டார்கள் – நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்காவிட்டால் – நீங்கள் அதை ஆய்வு செய்து பிளான்களை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ண நேரம் இருக்கும். பல்வேறு விஷயங்கள் ஒப்புதல் இல்லாத காரணத்தால், உறவு பலவீனமாகும்.

மீனம்:
பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருங்கள். உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். குழந்தை உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதால் உங்களின் கனவு நனவு ஆவதை நீங்கள் காணலாம். வேலைகள் நிலுவையில் இருந்தாலும் ரொமான்சும் சமூக நிகழ்வும் உங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். வேலையில் மற்றவர்களை கையாளும் போது அறிவும் பொறுமையும் – எச்சரிக்கையும் தேவை. இன்று நீங்கள் ஒரு நட்சத்திரம் என்பதைப் போல நடந்து கொள்ளுங்கள். ஆனால் பாராட்டக் கூடிய விஷயங்களுக்கு மட்டும். திருமண வாழ்வை இனிமையாக்க நீங்கள் இதுவரை எடுத்த முயற்சிகள் இன்று உங்களுக்கு பலன் தரும்.