We are harassing people: மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய நேரத்தில் துன்புறுத்துகிறோம் : பாஜக எம்பி வருண்காந்தி

தில்லி: we should be giving them relief : அரிசி, தயிர், பால் ஆகிய உணவுப்பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பதற்கு பாஜக எம்.பி வருண் காந்தி (Varun Gandhi) கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அரிசி, தயிர், மோர், லஸ்லி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் (Essential items) பேக் செய்யப்பட்டிருந்தால், அதற்கு 5 சதம் வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக இந்தப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி இருக்கவில்லை.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக பாஜக எம்பி வருண் காந்தி தனது சுட்டுரை (Twitter) பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, பால், தயிர், பருப்பு, ரொட்டி வெண்ணெய், அரிசி உள்ளிட்ட பாக்கெட் செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்திருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் சாதனை படைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

இந்த நிலையில், இது மாதிரியான ஜிஎஸ்டி (GST) வரிவிதிப்பு நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் வாடகை வீடுகளில் வசிக்கும் இளைஞர்கள்மீது இன்னும் அதிக நிதிச்சுமையை ஏற்படுத்திவிடும். அவர்களுக்கு நிவாரணம் (Relief) அளிக்கவேண்டிய நேரத்தில் நாம் அவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறோம் என அவர் பதிவிட்டிருக்கிறார். இது தேசிய அளவில் மட்டுமின்றி அவர் சார்ந்துள்ள கட்சியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.