Sonia gandhi : அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜராகிறார் சோனியா காந்தி

sonia-gandhi-appears-before-the-enforcement-directorate-today

தில்லி: Sonia Gandhi appears before the ED :நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக இன்று அமலாக்கத்துறை முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆஜராகிறார்.

நேஷனல் ஹெரால்டு (National Herald) வழக்கில் ஏற்கெனவே ராகுல்காந்தியிடம் அமலாக்கதுறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஜூன் 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு கரோனா தொற்றின் பாதிப்பு ஏற்பட்டதால், அவர் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கோரினார்.

கரோனா தொற்றின் (Impact of corona virus) பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சோனியாகாந்தி சிசிச்சைப் பெற்று வந்ததற்கு பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, ஓய்வு எடுத்து வந்தார்.

இதனையடுத்து விசாரணைக்கு (Investigation)தான் ஆஜராக மேலும் கால அவகாசம் வேண்டும் என்று சோனியா காந்தி அமலாக்க துறையினரைக் கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட அமலாக்க துறையினர், மீண்டும் கால அவகாசத்தை நீட்டித்தனர்.

இந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, இன்று விசாரணைக்கு சோனியாகாந்தி ஆஜராக உள்ளார்.

சோனியாகாந்தி விசாரணைக்கு அழைத்ததைக் கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் தில்லியில் காங்கிரஸ் அலுவலகம் (Congress office in Delhi) அமைந்துள்ள பகுதியில் அதிக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜராக உள்ள நிலையில் தில்லியில் பரவலாக பரபரப்பான சூழ்நிலை உள்ளது.