Rameswaram fishermen : ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு

File photo.

இராமேஸ்வரம்: Rameswaram fishermen captured by the Sri Lankan Navy : ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மீனவர்களிடம் அச்சமும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை 539 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் (More than 3 thousand fishermen) மீன்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

வியாழக்கிழமை அதிகாலையில் கச்சத்தீவு நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது அங்கு 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வேர்க்கோடைச் சேர்ந்த 45 வயது அ. ஆரோக்கியராஜ் (Arogya Raj) என்பவரையும், அவருக்கு சொந்தமான‌ சொந்தமான விசைப்படகையும் சிறைபிடித்தனர்.

படகில் மீன் பிடிக்கச் சென்ற‌ மீனவர்கள் 32 வயது பாலமுருகன், 38 வயது டி.அந்தோணி , 23 வயது கே.அர்ஜுனன், 45 வயது ஜெ.மடுகு பிச்சை, 55 வயது கே. தங்கப்பாண்டி, 21 வயது ராஜா ஆகியரைக் கைது செய்த இலங்கை கடற்படையினர், தலைமன்னார் (Talaimannar) கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

இலங்கை கடற்பகுதிக்குள் (Sri Lankan Coast) அத்துமீறி மீன்பிடித்ததாக மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மீனவர்கள் சென்ற படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட‌ 6 பேரை கடற்தொழில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.