Kanchipuram Kamachi Amman Temple : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 2 மாத உண்டியல் காணிக்கை ரூ. 74.40 லட்சம்

காஞ்சிபுரம்: Kanchipuram Kamachi Amman Temple Bill offering: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 2 மாத உண்டியல் காணிக்கையாக ரூ.74.40 லட்சம் என தெரிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் (Kanchipuram Kamachi Amman Temple) 2 மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் எண்ணப்படுவது வழக்கம். அதன் படி தற்போது உண்டியல்களை திறந்து எண்ணப்பட்டது.

காஞ்சிபுரம் அறநிலையத்துறை (Tamil Nadu Hindu Charities Department) சரக உதவி ஆணையர் ஆ.முத்து ரெத்தினவேலு , ஆய்வாளர் பிரித்திகா, கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர், செயல் அலுவலர் ந.தியாகராஜன் முன்னிலையில் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

கோயில் நவராத்திரி மண்டபத்தில் (Temple Navratri Mandapa) உண்டியல்கள் எண்ணும் பணியில் அறநிலையத்துறை பணியாளர்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் என பலரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இது குறித்து கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறுகையில், ரொக்கமாக ரூ.74,40,102, தங்கம் 589.700 கிராம், வெள்ளி 847.300 கிராம் இருந்ததாகவும், இவைகள் அனைத்தும் வங்கியில் உடனடியாக வைப்பு (Bank Deposit) செய்யப்பட்டுள்ளது. உண்டியல் எண்ணும் பணியை வீடியோ (Video Recording) மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.