Aishwarya Rai Pregnant : குழந்தைக்கு தாயாகப் போகிறாரா ஐஸ்வர்யா ராய் பச்சன் ? : வைரல் வீடியோவால் சந்தேகம்

Aishwarya Rai: வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

மும்பை: Is Aishwarya Rai going to be a mother?: ஐஸ்வர்யா ராய் கர்ப்பிணி: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நல்ல தாய் என்பதில் சந்தேகமில்லை. நடிகை ஐஸ்வர்யா ராய் தனது பிஸி ஷெட்யூல் இருந்தபோதிலும், தனது மகள் ஆராத்யா பச்சனுக்கு நேரம் கொடுக்க தவறுவதில்லை. இத்தனைக்கும் மத்தியில் ஐஸ்வர்யா ராய் பச்சன் மீண்டும் கர்ப்பமாகி உள்ளார் என்ற சந்தேகம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அண்மையில் மும்பை விமான நிலையத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா பச்சன் (Daughter Aaradhya Bachchan) ஆகியோர் கேமராக்களின் கண்ணில் பட்டனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், நீண்ட கருப்பு உடை அணிந்து, மகள் ஆராத்யா பச்சனின் கையைப் பிடித்தபடி நடந்து சென்றார். சாம்பல் நிற உடை மற்றும் இளஞ்சிவப்பு நிற ஸ்வெட்ஷர்ட் அணிந்திருந்த அபிஷேக் பச்சன் (Abhishek Bachchan) தனது மனைவி மற்றும் மகளின் பின்னால் நடந்தார்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் (Instagram) ரசிகர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன், நெட்டிசன்கள் கமெண்ட் மழை பொழிந்தனர். 48 வயதான நடிகை ஐஸ்வர்யா ராய், கருப்பு உடை அணிந்து, கர்ப்பமாகி புடைத்துள்ள வயிற்றை மறைக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.