Shocking ambulance crash: கண்ணிமைக்கும் நேரத்தில் சுங்கச்சாவடி மீது ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து: வீடியோ வைரல்

உடுப்பி: Ambulance crashes into toll booth: உடுப்பி அருகே சுங்கச்சாவடி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்தது நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

கர்நாடக மாநிலம், ஒன்னாவரிலிருந்து, உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பைந்தூர் சுங்கச்சாவடி அருகே (toll gate in Karnataka’s Udupi) ஆம்புலன்ஸ் சென்றபோது, சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுப்புகளையும், அங்கு படுத்திருந்த மாட்டையும் விரட்டினர். அங்கு மழை நீர் தேங்கியிருந்ததால் ஆம்புலன்ஸை கட்டுப்படுத்த முயன்றபோது கண்ணிமைக்கும் நேரத்தில் சுங்கச்சாவடி தூண் மீது மோதி கவிழ்ந்து (Speeding ambulance crashes) விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் (Massive Ambulance Crash) ஆம்புலன்ஸ் பின்புற கதவு திறக்கப்பட்டு உள்ளே இருந்த நோயாளி உட்பட 4 பேர் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சுங்கச்சாவடி ஊழியர், ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பைந்தூர் போலீசார் (Bindur Police), விபத்தில் பலியான நோயாளி உள்பட 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், உயிரிழந்தவர்கள் உத்தரகன்னடா மாவட்டம், ஒன்னாவர் அருகே அடகேரியை சேர்ந்த லட்சுமண நாயக், அவரது மனைவி ஜோதி நாயக் மற்றும் உறவினர்கள் மகாதேவ நாயக், லோகேஷ் நாயக் என்பது தெரியவந்தது.

இந்த கோர விபத்து சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் (Shocking video) பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,