Bbmp new wards development : பெங்களூரில் வார்டுகளின் வளர்ச்சிக்கு தலா ரூ. 2.5 கோடி நிதி ஒதுக்கீடு: மாநகராட்சி ஆணையர் துஷார் கிரிநாத்

பெங்களூரு : Bbmp wards, development Rs. 2.5 crore fund allocation : பெங்களூரில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள வார்டுகளின் வளர்ச்சிக்கு தலா ரூ. 2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பெங்களூரு மாநகராட்சி ஆணையர் துஷார் கிரிநாத் தெரிவித்தார்.

இது குறித்து புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரு மாநகராட்சியில் 198 ஆக இருந்த வார்டுகளின் எண்ணிக்கை தற்போது 243 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. புதிய வார்டுகளின் வளர்ச்சிக்கு தலா ரூ. 2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட வார்டுகளில் பணியாற்ற சுமார் 40 ஊழியர்களை நியமிக்க (Appoint 40 employees) அனுமதி அளிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

பெங்களூரில் குரங்கு அம்மை (Monkey Pox)பாதிப்பு யாருக்கும் இல்லை. ஒருவேளை யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில சுகாதாரத்துறையின் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெங்களூரில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை (Ban on use of plastic) விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிலர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்தும் பகுதிகளில் சோதனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் தங்களுக்கு சொந்தமானது என்று வஃக்ப் வாரியம் (Waqf Board) கூறியுள்ளது. அதனை நிரூப்பிக்க வஃக்ப் வாரியத்திற்கு 45 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஈத்கா மைதானம் யாருக்கு சொந்தம் என்பதை முடிவு செய்து அறிவிப்போம் என்றார்.