Today Astrology: இன்றைய ராசி (15.12.2022) பலன்களை தெரிந்துகொள்வோம்

மேஷம்:
மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். முக்கிய முடிவுகளில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்:
தேவையான பணம் கிடைக்கும், என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

மிதுனம்:
செயல்கள் வெற்றிகரமாக முடியும். தைரியமாகச் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், நன்மைகள் அதிகரிக்கும்.

கடகம்:
செயல்கள் அனுகூலமாகும், என்றாலும் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமை தேவை.

சிம்மம்:
குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். பிரச்னைகளைத் தவிர்க்க விட்டுக் கொடுத்துப்போவது நல்லது.

கன்னி:
மனதில் நம்பிக்கை அதிகரிக்கும் துணிந்து செயல்படுவீர்கள். செயல்களில் வெற்றி கிடைக்கும் குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

துலாம்:
பணவரவுக்கு வாய்ப்புண்டு. உறவினர்களால் மறைமுக ஆதாயம் ஏற்படும். கொடுத்துத் திரும்பவராது என்று நினைத்த தொகை வசூலாகும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு.

விருச்சிகம்:
முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். உறவுகளால் ஆதாயம் உண்டாகும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.

தனுசு:
உறவுகளிடம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள், என்றாலும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்:
வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற செலவுகள் குறித்துக் கவலைப்படுவீர்கள், இறைவழிபாடு கட்டாயம் தேவை.

கும்பம்:
மகிழ்ச்சியாக இருப்பீர்கள், எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும், எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும்.

மீனம்:
உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகள் சாதகமாகும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.