Tirupati temple revenue in July: ஜூலை மாதத்தில் திருப்பதி கோயில் வருவாய் ரூ.139.45 கோடி

ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி கோயில்கள் (TTD) ஜூலை மாதத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிகளின் கோயில் பக்தர்களின் காணிக்கை, நன்கொடை மூலம் ரூ.139.45 கோடி வருவாய் (Tirupati temple revenue in July) ஈட்டியுள்ளது. இதன் மூலம் உண்டியல் வசூலில் புதிய சாதனை படைத்தது. கடந்த சில மாதங்களாக கொடிய கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து, பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், கோயிலின் கருவூலத்திற்கு அதிகளவு பணம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் உண்டியல் காணிக்கை மூலம் வருவாய் அதிகரித்து வருகிறது

முன்னதாக, கரோனா தொற்று பரவியதால் (Due to the spread of corona infection), 83 நாட்களுக்கு கடவுளை தரிசனம் செய்ய பக்தர்களை திருப்பதி கோவில் தடை செய்தது. வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதால், மாநில மற்றும் மத்திய அரசுகளின் உத்தரவுகளுடன், TTD குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கத் தொடங்கியது. இதனை அடுத்து, ​​திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து. உண்டியல் காணிக்கையும், நன்கொடையும் குறைந்தது. இதனால் திருப்பதி திருமலை கோவிலின் ஆண்டு பட்ஜெட்டும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

தற்போது திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் உண்டியல் காணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஜூலை மாதத்தில் உண்டியல் மூலம் (By Hundi in July)ரூ.139.45 கோடி சேர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. உண்டியல் காணிக்கை மார்ச் மாதத்தில் ரூ.128 கோடியும், ஏப்ரலில் ரூ.127.5 கோடியும், மே மாதத்தில் ரூ.130.5 கோடியும், ஜூன் மாதத்தில் ரூ.123.75 கோடியும் வசூலித்துள்ளது. மார்ச் முதல் ஜூன் வரையிலான உண்டியல் காணிக்கை மூலம் நிகர வருவாய் ரூ.649.21 கோடியாக உள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக உண்டியல் மூலம் மாத வருமானம் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் ஜூலை வருவாய் ரூ. 100 கோடியை தாண்டி உள்ளது. இந்த ஆண்டுக்கு வந்தால் ஜூலை 5 ஆம் தேதி உண்டியல் வருமானம் ரூ.6.18 கோடியாக இருந்தது.

திருப்பதி கோயிலின் வருமான விவரங்களை ஆய்வு செய்தால் 1954 ஆம் ஆண்டு ஜூன் மாத வருவாய் ரூ. 5,35,703. ஆக இருந்தது. 2015-16 நிதியாண்டில் திருப்பதி கோயிலின் வருவாய் ரூ. 1,010 கோடியாக இருந்தது.

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 2 கோடி வருவாயாக கிடைத்தது.

உண்டியல் காணிக்கை அறுபடை வீடுகளில் 3 ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலில் (Palani Murugan temple) சாமி தரிசனம் செய்ய தினசரி ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். அவ்வாறு பழனிக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 17-ந்தேதி பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதற்கு பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நடராஜன் (Palani Murugan Temple Joint Commissioner Natarajan) தலைமை தாங்கினார். உதவி ஆணையர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 8 லட்சத்து 76 ஆயிரத்து 878 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 167 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர உண்டியலில் தங்கம் மற்றும் வெள்ளியாலான வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில் உள்ளிட்ட பொருட்களும் போடப்பட்டிருந்தது. அதன்படி தங்கம் 907 கிராம், வெள்ளி 1,500 கிலோ காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.