2 gold medals for India :காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவிற்கு ஒரே நாளில் 2 தங்கப் பதக்கம்

Image Credit : Twitter.

பர்யிங்ஹாம் : 2 gold medals in one day : காமன்வெல்த் விளையாட்டில் ஒரே நாளில் 2 தங்கப் பதக்கங்களை இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வென்றுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் பர்யிங்ஹாம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு (Commonwealth Games) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், இந்திய மகளிர் அணியினர் லான் பவுல் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர் கொண்டனர். இதில் 17-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டி லான் பவுல் விளையாட்டில் வரலாற்றில் முதன்முறையாக இந்தியா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இந்த அணியில் லவ்லி சவுபே, பிங்கி, நயன்மோனி சாய்கியா, ரூபா ராணி திர்கி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 3-1 என்ற கணக்கில் சிங்கப்பூர் அணியை வென்று தங்கப்பதக்கத்தை வெற்றி கொண்டனர். இந்த அணியில் ஹமீத் தேசாய், சத்தியன் (Hamid Desai, Satyan) இடம்பெற்றிருந்தனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள 7 வது தங்கம் இதுவாகும்.

பளுதூக்கும் போட்டிகளில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. அந்தப் பிரிவில் விகாஸ் தாகூர் வெள்ளியையும், ஹர்ஜிந்தர் கௌர் பெற்ற வெண்கலமும் சேர்த்து இந்தியாவிற்கு 8 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆடவருக்கான 96 கிலோ பிரிவில் விகாஸ் தாகூர் 155 கிலோ மற்றும் 191 கிலோ உள்பட மொத்தமாக 346 கிலோவை தூக்கி, வெள்ளிப் பதக்கத்தை (silver medal) வென்றார். ஹர்ஜிந்தர் கௌர் மொத்தமாக 212 கிலோ தூக்கி வெண்கலத்தை வென்றார். மகளிருக்கான 76 கிலோ பிரிவில் பூனம் யாதவ் பதக்கம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.

ஆண்களுக்கான நீளம் தாண்டும் தகுதிச் சுற்றில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் (Murali Sreesankar) 8.05 மீட்டருடன் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மான்பிரீத் கவுர் 16.78 மீட்டருடன் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ஆண்களுக்குகான 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக்கில் ஸ்ரீஹரி நடராஜன் இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். என்றாலும் 2.84 நிமிடத்தில் அவர் கடந்துள்ளது இந்தியர்கள் கடந்த நேரத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

பாட்மின்டன் (Badminton) போட்டியில் கலப்பு அணிப் பிரிவின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா, சிங்கப்பூர் அணியை தோற்கடித்து இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளது. இரட்டையர் பிரிவில் நடப்பு உலக சாம்பியன் லோகின் ஈவை, லக்ஷையா சென் தோற்கடித்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ், சிராக்ஷெட்டி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி (Hockey team) இங்கிலாந்து அணியினை எதிர் கொண்டு, 4-4 என்ற கணக்கில் போட்டியை டிரா செய்தனர். ஆனால் மகளிர் அணியினர் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தனர். சைக்கிள் போட்டியில் மகளிருக்கான 10 கி.மீ ஸ்க்ராட்ச் பிரிவு போட்டியில் இந்திய சைக்கிள் வீராங்கனை மீனாக்ஷி தவறி கீழே விழுந்தார். அவர் மீது நியூசிலாந்தின் பிரையோனி போத்தாவின் சைக்கிள் மோதியதால், மீனாக்ஷி காயமடைந்தார்.