Supreme Court order to High Court : எடப்பாடி பழனிசாமி தரப்பில் நடத்திய அதிமுக பொதுக்குழு நடத்தியது செல்லுமா ? : விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தில்லி: Supreme Court has ordered to complete the case trial in 2 weeks :ஓ.பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த‌ வழக்குகளை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வந்த நிலையில், அண்மையில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்னை எழுந்தது. இதனால் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களுக்கிடையே பிரச்னை எழுந்தது. இதனையடுத்து இருவரும் தலைமையில் அக்கட்சியினர் 2 அணிகளாக பிரிந்தனர். இதனையடுத்து பொதுக்குழு அமைத்து தனது பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்து,அதன்படி அதிமுக பொதுக்குழுவை நடத்தி, அதில் எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர் (Edappadi Palaniswami was chosen as the interim general secretary of the party).

இதனிடையே ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தொடந்த வழக்கு மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி (Justice Krishnan Ramasamy), உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து, இது தொடர்பான‌ வழக்குகளை தள்ளி வைத்திருந்தார்.

அதிமுக பொதுகுழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் (The resolutions of the General Committee should be annulled) என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், விசாரணையை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் (The case trial should be completed within 2 weeks)தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர். அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவற்றை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதற்கிடையில் பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை 2 வாரங்களில் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து நீதிபதி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த வழக்குகளை நாளை (ஆக. 4 )விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இது அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுக்குழுவை நடத்தி, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ள நிலையில், பொதுக்குழுவை நடத்தியதை எதிர்த்து தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்து 2 வாரங்களில் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு (Tamil Nadu politics is again in a frenzy) ஏற்பட்டுள்ளது.