6 year old girl dies : பெங்களூரு வசந்தநகரில் ஆறு வயது சிறுமி உயிரிழப்பு : வீட்டின் உரிமையாளர் கைது

பெங்களூரு; Six-year-old girl dies in Vasanthanagar : பெங்களூரு வசந்தநகரில் மூச்சு திணறி ஆறு வயது சிறுமி உயிரிழந்ததையடுத்து வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அஹானாவின் தந்தை வினோத் மற்றும் தாய் நிஷா கேரளாவை சேர்ந்தவர்கள் (Vinod and Nisha are from Kerala). எம்பிஏ பட்டதாரியான வினோத் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வசந்தநகர் மாரியம்மன் கோவில் அருகே இருந்த எஸ். சிவபிரசாத்துக்கு சொந்தமான மூன்று வாடகை வீடுகளில் ஒன்றில் அஹானாவின் குடும்பம் வசித்து வந்தது. இந்த வாடகை வீடுகளில் முட்டை பூச்சி அதிகமாக இருந்தது.

கட்டடத்தில் இருந்த வீடுகளில் முட்டை பூச்சி பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், சிவபிரசாத் தான் வசித்து வந்த‌ வீடு, வாடகைக்கு விட்டிருந்த 3 வீடுகள் உள்பட 4 வீடுகளுக்கும் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துள்ளார். ஜூலை 27 ஆம் தேதி கிருமிநாசினி தெளிக்கப்பட்டது (Disinfectant was sprayed). இதனையடுத்து சிவபிரசாத், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாடகை வீட்டில் வசித்து வந்த குடும்பங்களை வேறு இடத்திற்கு மாறி போகுமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து வினோத் குடும்பத்தை தவிர, மற்ற வீட்டில் வசித்தவர்கள் ஜூலை 31 அன்று தங்கள் வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். வினோத் மற்றும் மனைவி நிஷா மற்றும் மகள் அஹானா ஆகஸ்ட் 1 ஆம் தேதி அதிகாலையில் தங்கள் வசித்த வீட்டிற்கு திரும்பி உள்ள‌னர். வீட்டை அடைந்ததும், காபி தயாரித்து குடித்துள்ளனர் (Coffee is made and drunk). இதையடுத்து மூவருக்கும் வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்ப‌ட்டதால், அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மூவருக்கும் அவசர பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் சிகிச்சை பலனின்றி அஹானா உயிரிழந்தார். நிஷா மற்றும் வினோத் ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அஹானாவின் மரணம் குறித்த தகவலை அவர்களிடம் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் நிஷாவின் சகோதரி லதா ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் (at Highgrounds Police Station) இது தொடர்பாக புகார் அளித்தார். புகாரில் வீட்டின் உரிமையாளர் சிவபிரசாத்தின் அலட்சியத்தால் பூச்சி கொல்லி மருந்தை சுவாசித்ததால் சிறுமி அஹானா உயிரிழந்ததாக புகாரில் தெரிவித்து, இதற்கு காரணமான வீட்டின் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.புகாரையடுத்து வழக்கு பதிந்த போலீசார், வீட்டின் உரிமையாளர் சிவபிரசாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.