Priyanka, Rahul Gandhi twitter pages : பிரியங்கா, ராகுல்காந்தி தங்களின் சுட்டுரை பக்கங்களில் கொடியுடன் இருக்கும் நேரு படம்

தில்லி : Priyanka, Rahul Gandhi have a picture of Nehru with he hold National flag : கடந்த ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன்கி பாத் )நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாடு சுதந்திரம் அடைந்து 75-ம் ஆண்டையொட்டி ஆக. 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைவரது இல்லங்கள் தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இயக்கத்தில் அனைத்து இந்தியர்களும் பங்கேற்க வேண்டும். ஆக. 2 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைவரும் சமூக ஊடகத்தின் முகப்பில் வைக்கப்படும் புகைப்படங்களில் தேசிய கொடியை பதிவிட வேண்டுகிறேன்.

தேசிய கொடியை வடிவமைத்த (Designed the national flag) பிங்கலி வெங்கையா ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்தார். அவருக்கு தலைவணங்கி மரியாதை செய்கிறேன். இந்த நேரத்தில் மேடம் காமாவையும் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம். தேசிய கொடிக்கு வடிவம் கொடுப்பதில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது. அடுத்த 25 ஆண்டுகள் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தனது கடமைகளை முழுமுனைப்போடு செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற முடியும். அவர்கள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க முடியும்.

கரோனாவுக்கு எதிரான போராட்டம் இப்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில், ஆயுஷ் அமைச்சகம் முக்கியமான பங்களிப்பை அளித்திருக்கிறது. சர்வதேச அளவில் ஆயுர்வேதம், இந்திய நாட்டு மருந்துகள் மீதான ஈடுபாடு அதிகரித்து வருகிறது. அண்மையில் சர்வதேச ஆயுஷ் முதலீடு, கண்டுபிடிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் ரூ.10 ஆயிரம் கோடி வரை முதலீடு ஈர்க்கப்பட்டது. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் (44th Chess Olympiad) போட்டி நடைபெறுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய கௌர‌வம் ஆகும்.

கடந்த ஜூலை 28 ஆம் தேதி போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதே நாளில் இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளும் தொடங்கி உள்ளன‌. இதில் பங்கேற்றுள்ள அனைத்து இந்திய வீரர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை (FIFA World Cup Football Tournament) இந்தியா நடத்த இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் மாதம் நடைபெறும். தமிழகத்தை சேர்ந்தவர்களோடு பேச நேர்ந்தால், நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் பெயரை இந்த ரயில் நிலையத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில்தான் 25 வயது நிரம்பிய வாஞ்சிநாதன் (25 year old Vanchinathan), ஆங்கிலேயர் ஆட்சியர் செய்த தவறுக்கு தண்டனை வழங்கினார். நம் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி 24 மாநிலங்களில் 75 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த 75 நிலையங்கள் மிகவும் அழகாக புனரமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது என்று பேசினார்.

இதனையொட்டி செவ்வாய்க்கிழமை முதல் பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளை ஏற்று பாஜகவில் உள்ள முக்கியத் தலைவர்கள் (Seniar BJP leaders)தங்கள் சமூக பக்கங்களில் தேசியக் கொடியை முகப்பு படமாக வைத்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களான பிரியங்கா, ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு எதிராக சுட்டுரை பக்கத்தில் ஒரு படத்தை வைத்துள்ளார். அவர்கள் வைத்திருக்கும் முகப்பு படத்தில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை ஏந்தியிருக்கும் படத்தை வைத்துள்ளனர்.

மூவர்ணக் கொடி நாட்டின் பெருமை. அது ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் உள்ளது என்று இந்தியில் ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவு செய்துள்ளார். அவரது சகோதரியான பிரியங்கா காந்தியும் (Priyanka Gandhi) தனது சுட்டரை பக்கத்தில் முகப்பில் புகைப்படத்தை மாற்றி பதிவிட்டுள்ளார். இந்த படத்தை காங்கிரஸ் தலைவர்கள் முகப்பு படமாக மாற்றிவருகிறார்கள். இதனை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நாட்டுப்பற்றை எந்த விதத்திலாவது தெரிவிக்க வேண்டும் என்பதே எங்களில் நோக்கமாக உள்ளது. அதனை எங்கள் விரும்பம் போல தெரிவித்து வருகின்றோம் என்கின்றனர் சில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.