Sabarimala Ayyappan Temple : சபரிமலை ஐயப்பன் கோயில் நவ. 17 இல் மண்டல பூஜைக்காக திறப்பு

Image Credit: Twitter.

திருவனந்தபுரம் : Sabarimala Ayyappan Temple Nov. 17th Opening for Mandal Pooja: மண்டல மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் நவ.17 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் இணையதனம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, திருவாங்கூர் தேவசம் போர்டு (Travancore Devasam Board) வெளியிட்டுள்ள‌ அறிவிப்பு : மண்டல மாத பூஜைக்காக, சபரிமலை நடை வரும் நவ. 17 ஆம் தேதி திறக்கப் படுகிறது. இதைத் தொடர்ந்து, டிச. 27 ஆம் தேதியன்று மண்டல பூஜை முடித்து இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.

மகரவிளக்கு பூஜைக்காக டிச.30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் . அடுத்த ஆண்டு ஜன. 14 இல் மகரவிளக்கு பூஜை (Makaravilakku Pooja) நடத்தப்பட்டு, ஜன. 20 இல் நடை சாத்த‌ப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்பு , பூஜைக்காக பிப். 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 17 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். மார்ச் மாதம் 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 19 ஆம் தேதி இரவு 10 மணிக்கு சாத்தப்படும்.

சபரிமலை உற்சம் மற்றும் ஆராட்டிற்காக (Sabarimala Utsam and Aaratu) மே 14 இல் நடை, திறந்து மே 19 இல் சாத்தப்படும். ஐயப்பன் பிரதிஷ்டை தினம் மே 29 இல் கொண்டாடப்படுகிறது. இதற்காக அன்று நடை திறக்கப்பட்டு, மே 30 ஆம் தேதி இரவு 10 மணிக்கு சாத்தப்படும். ஜூன் மாத பூஜைக்காக 15 இல் நடை திறக்கப்பட்டு, ஜுன் 20 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். ஜூலை மாதம் பூஜைக்காக நடை 16 ஆம் தேதி திறக்கப்பட்டு, 21 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.