Lakhs Visit Tiruchendur Subramanya Swamy Temple: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கானோர் தரிசனம்

திருச்செந்தூர்: ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து (Lakhs Visit Tiruchendur Subramanya Swamy Temple) கோயில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதே போன்று அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கமாக காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்.

இந்நிலையில், இன்றை தினம் ஆங்கில புத்தாண்டு என்பதால் கோயில் நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டு இன்று ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூஜைகளும் நடந்தது.

புத்தாண்டை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டத்தால் கடற்கரை நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.