New Year Celebrations In Puducherry: புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்தில் தடியடியால் மக்கள் அதிர்ச்சி

புதுவை: புத்தாண்டு கொண்டாட்டத்தை (New Year Celebrations In Puducherry) ஜாலியாக கொண்டாட பல இளைஞர்கள் புதுச்சேரியை தேர்ந்தெடுப்பது வழக்கம். இதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் நேற்று (டிசம்பர் 31) இரவு குவிந்தனர்.

இதனால் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் அனைத்திலும் முன்பதிவு செய்யப்பட்ட அறைகள் நிரம்பின. சிலர் அறைகள் கிடைக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதுச்சேரியின் முக்கிய சுற்றுலாத் தளமான கடற்கரை சாலையில் எப்படியும் 25,000 பேர் வரை கூடுவார்கள் என்று போலீசார் கணித்திருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கூடியதால் போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.

மேலும், பலர் கடற்கரை சாலையை நோக்கி வந்து கொண்டிருந்ததால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தனர். பலர் போலீசாரின் தடையை மீறி நுழைய முயன்றவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் பொதுமக்கள் அங்கும் இங்குமாக ஓடினர். இதனால் அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதனை கண்டு ஆத்திரமடைந்த இளைஞர்கள் விசில் அடித்தும், கோஷமிட்டும் பாட்டை திரும்ப போட வலியுறுத்தினர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி தர மறுத்ததால் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். வேறு வழியின்றி அனைவரையும் தடியடி நடத்தி போலீசார் கட்டுப்படுத்தினர். புத்தாண்டை கொண்டாட வெளியூரில் வந்திருந்த பலர் ஏமாற்றத்துடன் சொந்த ஊர் திரும்பும் நிலை உருவாகியது.