Exchange Of List Of Prisoners: இந்தியா, பாகிஸ்தான் சிறையில் உள்ள மீனவர்கள் பட்டியல் பரிமாற்றம்

டெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே (Exchange Of List Of Prisoners) தூதரக ஒப்பந்த அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி மற்றும் ஜூலை 1 ஆகிய நாடகளில் தங்கள் நாடுகளில் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் மீனவர்கள் அடங்கிய பட்டியலை பரிமாற்றம் செய்வது வழக்கம்.

அதே போன்று இந்த முறையானது இன்று பின்பற்றப்பட்டது. இந்திய சார்பில் மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கைதிகளாக உள்ள இந்திய குடிமக்கள் காணாமல் போன பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்களை விடுவிக்கும்படியும், அவர்களை இந்தியா வசம் ஒப்படைக்கவும் கேட்டுக்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி மொத்தம் 631 இந்திய மீனவர்கள் மற்றும் இரண்டு இந்திய கைதிகள் உள்ளிட்டோரின் தண்டனை காலம் நிறைவுற்றும் பாகிஸ்தான் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியர்கள் என்பதற்கான சான்று உறுதி செய்யப்பட்டு பாகிஸ்தான் நாட்டிடம் கூறப்பட்டுள்ளது. அதே போன்று தற்போது இந்தியா வசமுள்ள மீனவர்கள் மற்றும் 71 பாகிஸ்தானிய கைதிகள் தகவலை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.