Sangam Chennai Food Festivals: 10 ஆண்டுக்கு பின்பு சென்னை சங்கமத்தில் 16 இடங்களில் உணவுத்திருவிழா

சென்னை: சென்னை மாநகரில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் (Sangam Chennai Food Festivals) சென்னை சங்கமம் நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி 13ம் தேதி தொடங்க உள்ளது. தீவுத்திடலில் நடைபெறும் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த திருவிழா தொடர்ந்து 17ம் தேதி வரை 4 நாட்கள் சென்னை மாநகரில் 16 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கானோர்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையிலான பாரம்பரி உணவுகளை உண்பார்கள் என கூறப்படுகிறது.

கரகாட்டம் கோப்புப்படம்.

அதன்படி விவரங்கள் வருமாறு, தீவுத்திடல், பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், கொளத்தூர், முரசொலி மாறன் மேம்பால பூங்கா, பெரம்பூர், ராபின்சன் பூங்கா, ராயபுரம், நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், சிந்தாதிரிப்பேட்டை, டென்னிஸ் விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம், டவர் பூங்கா, அண்ணாநகர், ஜெய் நகர் பூங்கா, கோயம்பேடு, ராமகிருஷ்ணா நகர் விளையாட்டு திடல், வளசரவாக்கம், சிவன் பூங்கா, கே.கே.நகர், கடற்கரை சாலை, திருவான்மியூர், அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், சைதாப்பேட்டை, நடேசன் பூங்கா, தியாகராய நகர்.

இந்நிலையில், தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். அப்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பம்மையாட்டம், தெருக்கூத்து, கட்டைக் கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம், தோற் பாவைக்கூத்து, சேர்வையாட்டம், தெம்மாங்கு பாட்டு உட்பட 30க்கும் அதிகமான கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.
மேலும், நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடங்களில் தமிழகத்தின் பாரம்பரிய உணவுகள் மற்றும் மாவட்டந்தோறும் இருக்கக்கூடிய ஸ்பெஷல் உணவுகளும் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.