December GST: டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் மட்டும் ரூ.1.49 லட்சம் கோடி

டெல்லி: கடந்த ஆண்டு டிசம்பர் (December GST) மாதம் ஜி.எஸ்.டி. மட்டும் ரூ.1,49,507 கோடி அளவில் வசூல் செய்யப்பட்டுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் ஜி.எஸ்.டி. வரி வசூல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது என பா.ஜ.க.வினர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிசம்பர் மாதம் வசூலான ரூ.1,49,507 கோடி ஜி.எஸ்.டி.யில் சி.ஜி.எஸ்.டி. ரூ.26,711 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி. ரூ.33,357 கோடி, ஜி.ஜி.எஸ்.டி. ரூ.78,434 கோடி, பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.40,263 கோடி அடங்கும். செஸ், ரூ.11,005 கோடி ஆகும்.

மேலும் டிசம்பர் வசூலான ஜி.எஸ்.டி. ஆனது 2021 டிசம்பர் வசூலானதை விட 15 சதவீதம் அதிகம் ஆகும். இறக்குமதி மூலம் கிடைத்த வருமானம் ஆனது 8 சதவீதமும், உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைத்த வருமானம் 18 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.