Rajinikanth Greeted The New Year: உன் வாழ்க்கை உன் கையில்: நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து

சென்னை: ஆங்கில புத்தாண்டு வாழ்த்து (Rajinikanth Greeted The New Year) தெரிவிப்பதற்காக வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு கையசைத்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு முடிவுற்று 2023ம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. இதனையடுத்து இந்தியா முழுவதும் மக்கள் ஆட்டம், பாட்டம் என்று கொண்டாட்டத்துடன் ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடன கொண்டாடி வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

நள்ளிரவு முதலே கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. மேலும் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட மிக முக்கிய நகரங்களில் புத்தாண்டு 2023 கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதனையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

புதிதாக பிறந்துள்ள 2023 ஆங்கில புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் நன்மை மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்று மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில், 2023 புத்தாண்டு வாழ்த்து கூறுவதற்கு சென்னை, போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்து கூறினார். இது பற்றி நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. உன் வாழ்க்கை உன் கையில்’ என தெரிவித்துள்ளார்.