Rasi Palan Today: இன்றைய ராசி பலன் (16.12.2022)

சென்னை: இன்றைய நாள் வெள்ளிக்கிழமை சுபகிருது வருடம் (Rasi Palan Today) மார்கழி மாதம் 1ம் தேதி, 16.12.2022. இன்று 12 ராசிகாரர்களின் ராசி எப்படி என்று பார்ப்போம்.

மேஷம்: நீங்கள் என்னதான் திட்டமிட்டு செயல்பட்டாலும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவதியுற நேரிடும். அதே நேரத்தில் அவசியமான தேவைக்கு கடன் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வியாபாரம் இருக்காது. தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு பணத்தை இழக்க வேண்டாம்.

ரிஷபம்: நீங்கள் வாங்கிய நிலத்தில் பராமரிப்பு பணி செய்வீர்கள். விவசாயத்தில் அதிகமான அக்கறை செலுத்துவீர்கள். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பணத்தை கொடுத்து வைப்பீர்கள். போட்டி பந்தயங்கள் உங்களுக்கு சாதகமானதாக அமையலாம்.

மிதுனம்: உங்கள் மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்குவதற்கு திட்டம் போடுவீர்கள். வீட்டில் புதிய மின்சார உபகரணங்கள் வாங்கலாம். குடும்பத்தாருடன் சென்று புதிய துணி, மணிகள் வாங்கலாம். தாய்மாமன் வீட்டில் உள்ள சில சிக்கல்கள் தீரும். சகோதரருக்கு பணம் உதவி செய்வீர்கள்.

கடகம்: அரசியல் தலைவர்கள் பொதுமக்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பேராசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் தங்கள் தொழிலில் சாதுர்யமாக நடந்து கொள்வீர்கள். சிறிய கடையை பெரிதாக மாற்றுவதற்கு திட்டம் வைத்திருப்பீர்கள். மேலும், புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு உள்ளது.

சிம்மம்: தொலைதூரப் பயணங்களை தவிர்க்கவும். வேலையாட்களின் பேச்சை கேட்க மாட்டார்கள். இதனால் உற்பத்தியில் சில தடங்கல் வரலாம். குடும்பத்தில் உங்களின் கருத்தை திணிக்க வேண்டாம். சில பண வரவுகள் தாமதமாகும்.

கன்னி: ஆண் மற்றும் பெண் இருவரும் இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேலி செய்கிறோம் என்று அவமானத்திற்கு தள்ளப்படுவீர்கள். கூடிப் பேசி உங்களோடு வேலை செய்பவர்கள் உங்களை கீழே தள்ள முயற்சிப்பார்கள். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

துலாம்: உங்கள் தொழிலுக்கு ஒரு சில நபர் உதவி செய்யலாம். நம்பிக்கையாக முதலீடு செய்யவும் உதவுவார்கள். பணத்தை பொறுப்பாக சேமித்து வைப்பீர்கள். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். கமிஷன் வியாபாரத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.

விருச்சிகம்: நிலம் வியாபாரத்தில் அதிகமான லாபம் கிடைக்கும். பல ஆண்டுகளாக விற்கப்படாத சொத்து இன்று விற்க நேரிடலாம். கடைகளில் முதலீடு செய்ததில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு: திருமணப் பேச்சுகளில் தடைகள் வரலாம். உறவினர்களில் நடக்க இருக்கும் சுப நிகழ்ச்சிகளில் தாமதம் ஏற்படும். எவ்வித அவசரமான வேலையாக இருந்தாலும் நிதானமாகச் செய்ய வேண்டும். வேலை செய்யும் இடத்தில் விபத்து ஏற்படலாம்.

மகரம்: அடுத்தவர்கள் பேச்சால் தொழிலில் சில சிக்கல் வரும். இரண்டு மடங்கு பணம் தருகிறோம் என்று ஏமாற்றுபவர்களிட் உஷாராக ஒதுங்கிவிடுங்கள். ஆன்லைன் சூதாட்டம் உங்களை நாசமாக்கிவிடும். லாட்டரியில் மனம் சென்றால் பணத்தை இழக்க நேரிடும்.

கும்பம்: நெருக்கமான நண்பர்களுக்கு இன்று விருந்து அளிப்பீர்கள். மாமனார் வீட்டில் இருந்து செல்வம் கிடைக்கலாம். கதை மற்றும் கவிதைகளில் ஈடுபாடு கிட்டும். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தினால் சில பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

மீனம்: இன்று தொழிலில் நடைபெறும் சில நஷ்டங்களை தன்னம்பிக்கையுடன் முறியடிப்பீர்கள். வெளியில் சென்றவர்கள் வீடு தேடி வருவார்கள். உறவினர்கள் அனுசரணையாக நடக்க நேரிடலாம். வெளியூர் பயணத்தில் தடங்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் கிடைக்கும்.

முந்தைய செய்திகளை படிக்க:Kallakurichi Student To Hand Over Cell Phone: கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் யாருக்கு: சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

முந்தைய செய்திகளை படிக்க:Rahul Dravid Reacts As Allan Donald Issues: 1997ம் ஆண்டு நடந்த சம்பவம்: ராகுல் டிராவிட் கொடுத்த சுவாரஸ்ய பதில்!