Kallakurichi Student To Hand Over Cell Phone: கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் யாருக்கு: சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி (Kallakurichi Student To Hand Over Cell Phone) மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரது தந்தை ராமலிங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை விசாரணைக்கு ஒப்படைக்கும்படி ஏற்கனவே உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவர் மூலமாக போலீசார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அதே நேரத்தில் 4 முறை வழக்கு பற்றிய சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை விசாரணையின்போது ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் இரண்டு மாதங்களில் இந்த விசாரணையானது முடிவடைய இருக்கிறது என்று போலீசார் சார்பில் கூறப்பட்டது. அந்த சமயத்தில் மாணவி செல்போன் எதுவும் வைக்கவில்லை, விடுதியில் உள்ள வார்டன் செல்போன் மூலமாகதான் பேசியதாக மாணவியின் தந்தை ராமலிங்கம் சார்பாக முன்வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி செல்போனை ஒப்படைப்பதில் என்ன மாதிரியான பிரச்சனை இருக்கிறது. மாணவி பயன்படுத்திய செல்போன் இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வியை முன்வைத்தனர்.

இது பற்றி பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதாக மாணவியின் தந்தை சார்பில் கூறப்பட்டது. ஆதாரம் இருந்து அதனை ஒரு வேளை மறைத்தால் அது சட்டப்படியாக குற்றம் ஆகும். அதற்காகவும் விசாரணை ஒன்று நடத்த உத்தரவிட நேரிடலாம். எனவே செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிதிபதி கூறினர். அது மட்டுமின்றி வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி பள்ளி ஒன்றில் மாணவி உயிரிழந்த சம்பவத்தால் அந்த பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர். இதனால் பல மாதங்களாக அப்பள்ளி பூட்டப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திகளை படிக்க:Rahul Dravid Reacts As Allan Donald Issues: 1997ம் ஆண்டு நடந்த சம்பவம்: ராகுல் டிராவிட் கொடுத்த சுவாரஸ்ய பதில்!

முந்தைய செய்திகளை படிக்க:Rajinikanth Birthday: நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து