Rahul Dravid Reacts As Allan Donald Issues: 1997ம் ஆண்டு நடந்த சம்பவம்: ராகுல் டிராவிட் கொடுத்த சுவாரஸ்ய பதில்!

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே தற்போது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. அதன்படி வங்காளதேச அணியின் பயிற்சியாளராக டொனால்டு இருக்கின்றார். இந்திய அணியின் சார்பில் தலைமை பயிற்சியாளராக (Rahul Dravid Reacts As Allan Donald Issues) ராகுல் டிராவிட் இருக்கின்றார். இந்த இரண்டு பேரும் அவர்கள் விளையாடிய சமயத்தில் மிகச்சிறந்த வீரர்களாக போற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக டொனால்டு திகழ்கிறார். இவரின் பந்துகளை எதிர்கொள்வதற்கு பேட்ஸ்மேன்கள் பயப்படுவார்கள். அதே நேரத்தில் எவ்வித வேப்பந்து வீச்சாளர் பந்து வீசினாலும் மிக எளிதாக தடுத்து விளையாடுவதில் ராகுல் டிராவிட் இருப்பார். இதனிடையே கடந்த 1997ம் ஆண்டு இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டர்பனில் ஒருநாள் போட்டியில் விளையாடியது. அந்த நேரத்தில் இலக்கை நோக்கி இந்திய அணி சென்றபோது ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் மிகச் சிறப்பாக விளையாடி வந்தனர்.

அதே நேரத்தில் இந்த இரண்டு பேரையும் பந்து வீச்சால் எளிதில் பிரிக்க முடியாத தென்னாப்பிரிக்க வீரர்கள், ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர். இதனால் ஒரு கட்டத்திற்கு பின்னர் எல்லை மீறியதாக கூறப்படுகிறது. இது டொனால்டு மனதில் ஒருவிதமான சங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இரண்டு பேரும் சந்தித்து பயிற்சியாளராக இருக்கின்ற சமயத்தில், அந்த சம்பவத்திற்கு தற்போது வருத்தம் தெரிவித்தது மட்டுமின்றி ராகுலை விருந்துக்கும் அழைத்துள்ளார். இது தொடர்பாக டொனால்டு கூறும்போது: ‘‘டர்பனில் மோசமான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. ஆனால் அதனை பற்றி தற்போது பேசவில்லை. ஆனால் சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் எல்லா கோணங்களிலும் சிதைத்துக் கொண்டிருந்தனர் இதனால் நான் கொஞ்சம் அதிகமாக எல்லை மீறி விட்டேன். மேலும், ராகுல் டிராவிட் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு அதனை தவிர வேறு ஒன்றும் இல்லை. அன்று நடந்த சம்பவத்திற்கு ராகுலிடம் சென்று மன்னிப்பு கேட்க ஆசைப்படுகிறேன். மேலும், அவரின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு நான் சற்று சின்னப்பிள்ளை தனமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். அவை அனைத்திற்கு தற்போது மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ராகுல் டிராவிட் மிகச்சிறந்த மனிதர். சிறந்த வீரரரும் ஆவார். ஆகவே நீங்கள் அதனை புரிந்து கொண்டால் உங்களுடைய இரவு உணவை சாப்பிட விரும்புகிறேன் என கூறியுள்ளார். இதனை கேள்விப்பட்ட ராகுல் டிராவிட், நிச்சயமாக நான் அதனை எதிர்பார்த்துள்ளேன். குறிப்பாக நீங்கள் பணம் செலுத்துவீர்கள் என்றால்.. என்ற பதில் கூறியது கிரிக்கெட் வீரர்களிடையே மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் கலகலப்பாக பேசப்பட்டு வருகிறது.

முந்தைய செய்திகளை படிக்க:Bus Van Collision In Kumarapalayam: செங்கத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன் குமாரபாளையத்தில் பயங்கர விபத்து

முந்தைய செய்திகளை படிக்க:Survey To Identify School: பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டுப்பிடிக்க கணக்கெடுப்பு